பக்கம்:முதல் பொது நூலக இயக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கம் போன்ற பெரிய நூலகங்கள் காங்கிரசு பதிவு நூலக முறை அல்லது டுயியினுடைய பிரெசல் (Brussels) விரிவு முறையைப் பின்பற்றுகின்றன. அதுவுமன்றி, சேர்க்கப்பட்ட நூல்களின் குறிப்பிட்ட தேவைக்கேற்ற பிரிவுகளைச் சில நூலகங்கள் மேற்கொள்ளுகின்றன. ஆனால், மிகச் சிறு நூலக முதல் பெரிய நூலகம் வரையுள்ள எல்லா நூலகங்களும் உலக முழுதும் பரவிய 'டுயி' முறையையே பின்பற்றியும், பரப்பியும் வருகின்றன. ஏனென்றால், இம்முறையினால் ஒரு நூலகத்திலே தன் விருப்பம் போல நூல் எடுக்கப் பழகிய ஒருவன், ஏனைய எல்லா நூலகங்களிலும் நுழைந்து, தன் விருப்பம் போல நூல்களை எடுக்கமுடியும் என்பதால் என்னலாம்.

நூல் தட்டுகளிலே எத்தனை வகையான நூல்கள் உள்ளனவோ, அத்தனை வகையான மக்களும் உளர். குழந்தைகள் நீங்கலாக உள்ள மக்கள் வெவ்வேறு வயதினர் , வெவ்வேறு வாழ்க்கையினர். அங்கே சாதிப் பிரிவினை இல்லை. நூலகங்களிலே நூல்கள் எடுக்கவும், நூலகத்தார்தம் உதவியைப் பெறவும், ஏழ்மை, செல்வ நிலை எதுவும் தடையாக நிற்பதில்லை. நூலகத்திற்குள் நுழைந்த ஒருவன் எப்படி நூல்களை எடுக்கிறான் என்பதைப் பார்க்கலாம். நூலக வாயில் அதிகாரியிடம் சென்ற அவன், தான் படித்துவிட்ட நூல்களை அவரிடம் கொடுத்துவிட்ட பின்னர், தன் அட்டைகளை வாங்கிக் கொள்கிறான், இங்கிலாந்திலுள்ள எல்லா நூலகங்களும், அட்டை முறையையே மேற்கொண்டுள்ளன. ஒவ்வொருவனுக்கும் ஒன்று, இரண்டு அல்லது அவற்றுக்கும் அதிகமான அட்டைகள் கொடுக்-