பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம் 25

பூச்சி, கம்பளி வகை கடிகளிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ்வோம்


தமது வீடு சுத்தமாக இல்லையென்றால், வீட்டின் சுவர்களது ஓரங்களில் விஷப்பூச்சிகள் தங்கிட வாய்ப்புகள் உண்டு.

வீட்டின் அருகே, செடி கொடி வகைகள் பயிரிடுதல் எப்போதும் ஆபத்து வரக் கூடிய ஒரு வழியாகும். வீட்டின் பின் புறங்களில் வேண்டுமானால், பூச்செடி வகைகள், காய்கறிவகைச் செடிகொடிகளை வளர்த்தாலும் வளர்க்கலாம். ஆனால் அந்த இடங்களை நாம் அடிக்கடி எச்சரிக்கையுடன் எப்போதும் கண்காணித்தாக வேண்டும். இல்லையென்றால், பாம்பு வகைகள் மற்ற விஷப் பூச்சி வகைகள், நமது பார்வைக்குப் படாமல், செடி கொடிகளோடு, செடிகொடிகளாய் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும். சமயம் வரும் போது அவற்றால் நமக்கு அபாயம் ஏற்பட்டாலும் ஏற்படும்.

ஆனால், வீட்டின் முன்பக்கம், வீட்டின் சுற்றுப் புறங்களில், பக்க வாட்ட இடங்களில் கூடுமானவரை செடி கொடிகளை வளர்க்காமல் இருந்தால் நமது குழந்தைகள் வளர்ப்புக்கு நல்லது.

அந்தச் செடி கொடி வகைகளில், மரக்கட்டைப் பூச்சி கம்பளிப்பூச்சி, போன்ற இனங்கள் ஊர்ந்து உலாவக் கூடும். பார்ப்பதற்கு வேண்டுமானால், அலட்சியமாக நமக்குத் தெரியும். ஆனால், சில நேரங்களில் அவற்றாலும் நமக்கு அபாயங்கள் உருவாகும்.