பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்


உதாரணமாக, நமது சின்னஞ் சிறு குழந்தைகள், ஒரு வயது ஒன்னரை வயது குழந்தைகள் எதையும் விவரித்துச் சொல்ல முடியாத குழந்தைகள், செடி கொடிகளில் ஊர்ந்து போகின்றவைப் பற்றி விவரம் தெரியாத குழந்தைகள், மலையிலோ காலையிலோ அந்த இடங்களிலே விளையாடுகின்றன. அந்த நேரங்களில் குழந்தைகள் அந்தப் பூச்சிகளை கையாலேகூடப் பிடித்து விளையாடும் சூழ்நிலைகள் வரலாம்.

எந்த விஷப் பூச்சியாவது அந்தக் குழந்தைகளைத் தீண்டிவிட்டால், இரண்டொரு நாட்கள் சென்றதும். குழந்தையின் உடல் எல்லாம் தழும்பு தழும்பாக.தடிப்பு தடிப்பாக, திட்டுத் திட்டாக, பரவலாக உண்டாகும். அதற்குப் பிறகுதான் நமது வீட்டுத் தாய்மார்கள், ஐய்யய்யோ பூச்சி கடித்து விட்டது என்று நினைப்பார்கள் கூறுவார்கள், வீட்டின் அருகே உள்ள பெரியவர்களிடம் காட்டுவார்கள். அதற்குள் அந்தப் பூச்சிக் கடிகள் விஹம்போல உடல் முழுவதுமாகப் பரவிவிடும்.

உடனே தாய்மார்கள், மந்திரவாதிகளிடம் ஒடுவார்கள், மசூதிக்குச் சென்று முகத்தில் நீரடித்து மந்திரம் ஜெபிப்பாாகள், பூசாரி வேப்பிலை அடிப்பான். மந்திர முடிச்சுக் கயிறுகளைக் கழுத்திலே பூட்டுவர்கள். இவை அனைத்துக்கும் பணச் செலவு வேறு அதிகமாகும்.

சில தாய்மார்கள் குழந்தைக்குக் காலையிலே நல்லெண்ணைய் உள்ளுக்குக் கொடுத்துச் சாப்பிடச் சொல்வார்கள். சில பெண்கள், டாக்டரிடம் ஓடி ஊசி போடுவார்கள். டாக்டரும் இது அலர்ஜி என்று கூறி ஊசி போடுவார், மருந்து மாத்திரைகளை உட்கொள்ளச் சொல்லுவார். இவ்வளவுக்கும் செலவு மேல் செலவு குழந்தைக்காக நாம் செலவு செய்து பார்க்கும் நிலையேற்படுகின்றது.