பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை நீங்கி நலழுடன் வாழலாம்

27


அதற்குள் குழந்தை உடல் பலவீனமாகிவிடும். அதன் சிறுநீர் மஞ்சள் போல போகும். கண்கள் குழிவிழும். கன்னங்கள் ஒட்டும். வயிறு தேயும்.உடல் எலும்புகள் தெரிய ஆரம்பித்துவிடும். குழந்தையின் பெற்றோர்கள் ஒவ்வொரு இடமாய், மருத்துவத்துக்காக அலைபாய்ந்து ஓடுவார்கள். இறுதியில் பெரும்பாலான குழந்தைகள் படாதபாடுபட்டு, தொல்லைகளை அனுபவித்து, துன்பங்களால் துவண்டு பிழைத்துவிடும். சில குழந்தைகள் நிலைமை மிக மோசமாகவும்கூடும்.

சாதாரண பூச்சிக்கடி, கம்பளிப் பூச்சிக்கடிகள் இப்படிப்பட்ட ஒரு தீராத துன்பங்களைச் சில நாட்களுக்கு நமக்குக் கொடுத்து விடுகின்றன. அந்தப் பூச்சிக் கடிகளால் குழந்தைகளது உடல்கள் பழையபடி மீண்டும் தேற சில மாதங்கள் ஆகலாம். அது வரை நமது பணம்தான் செலவாகிக் கொண்டே இருக்கும். குழந்தை உயிர் பெரிதா, பணம் பெரிதா என்ற தர்ம சங்கடமான சூழ்நிலைகள் வீட்டில் அடிக்கடி நேரும்.

இவற்றை எல்லாம் தவிர்ப்பதற்காகத் தான், வீட்டின் முன்புறத்திலோ, சுவர்களின் பக்கவாட்டங்களிலோ எந்தவிதமான செடி கொடிகளையும் வளர்க்கக் கூடாது என்கிறோம். வீட்டின் பின்புறங்களில் கூட, நாம் செடிகொடிகளை வளர்க்கும்போது எச்சரிக்கையுடன் இருப்பது மட்டுமல்ல, கூடுமான வரையிலும் அந்தப் பக்கங்களில் குழந்தைகளை செல்லவிடாமல் தடுப்பது நல்லது.

அதற்காக வீட்டின் உபயோகத்திற்காகப் பயன்படும் செடிகொடிகளை வளர்க்காமல் இருக்க முடியுமா? என்ற கேள்விகளைச் சிலர் கேட்பார்கள்.