பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

முதுமைக் காலத் தோல்லை, பூச்சிகளினால் ஏற்படும்


செடி கொடிகளை வளர்க்கலாம்! ஆனால், எச்சரிக்கையாக எப்போதும் இருக்க வேண்டும். செடி கொடிகளிலே வளரும் பூச்சிகளை வளரவிடாமல், அவற்றை ஒழிக்க சில தடுப்பு வழிகளையாவது வீட்டில் உள்ளோர் செய்ய வேண்டும்.

அப்படி என்ன வழி என்று கேட்பீர்கள். உதாரணமாக, மிளகாய், கடுகு போன்ற காரவகைப் பொருட்களை நன்றாக ஒட்ட ஒட்ட தேய்த்து அரைத்து அவற்றுடன் சோப்பு கலந்த நீரைச் சேர்த்துக் கலந்து, செடி கொடிகளில் வளரும் பூச்சிகள் உள்ள எல்லாப் பகுதிகளிலும், பூச்சிகள் இல்லாத பகுதிகளிலும் தெளிக்க வேண்டும்.

அவ்வாறு காரவகைப் பொருட்களின் நெடிகளால், எரிச்சல்களால், வண்டுகள், கம்பளிப் பூச்சிகள், மரக்கட்டைப் பூச்சிகள் உட்பட வேறு எந்த வகைப் பூச்சிகள் இருந்தாலும் அழிந்துவிடும் என்பது உறுதி.

அதே போல, கடுகு என்ற பொருளையும், பூண்டு என்ற பொருளையும் சேர்த்து நைய்ய அரைத்து, அந்தச் சாந்துடன் சோப்புநீரையும் சற்று அதிகமாகச் சேர்த்து அல்லது சமமாகச் சேர்த்துச் செடிகொடிகளின் மீது தெளித்துப் பாருங்கள். வண்டுகள், கம்பளிப்பூச்சிகள், ஏன் செடி கொசுக்கள், மரக்கட்டைகள் எல்லாம் அந்த நெடிகள் தாங்காமல், அழிந்து விடும்.

இந்த வழிகளைக் கூடவா செடிகொடிகள் வளர்ப்போர் செய்யக் கூடாது. தங்களது குழந்தைகளைப் பூச்சிக் கடிகளிலே இருந்து காப்பாற்றிட?

✽✽✽✽✽✽