பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை நீங்கி நலழுடன் வாழலாம்

29


கொசுக்கடியை
தடுத்திடுங்கள்

வீடுகளில் இரவு ஆனதும் கொசுக்கள் அதிக அளவில் வீடு புகுந்து கடிக்கின்றன, ஏன்? நமது வீடுகளைச் சுற்றியுள்ள அசுத்தங்களும், குப்பை மேடுகளும், அழுகிய பொருட்களின் நாற்றங்களும், சாக்கடைச் சேறுகளும், சகதிகளாலும் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு செய்தியாகும். ஆனால், எந்த வீடுகளில், வீதிகளில் சாக்கடைகளையும், குப்பைமேடுகளையும் சேரவிடாமல் ஒழுங்காகப் பராமரித்து வருகிறார்கள்? ஊராட்சி மன்றங்களும், நகராட்சி மன்றங்களும், மாநகராட்சி மன்றங்களும் கூட இந்த சுத்தங்களை அக்கறையாகச் செய்யாத காரணத்தால்தான். எல்லா இடங்களிலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து மக்களுக்குத் தொல்லைகளை, நோய்களை உருவாக்கி வருகின்றன.

கொசுக் கடிகளால் மலேரியா காய்ச்சல், நிமோனியா காய்ச்சல், மற்ற காய்ச்சல் வகைகள் வருவதாக அரசு விளம்பரப்படுத்தி எச்சரிக்கின்றதே தவிர, கொசுக்களை அடியோடு ஒழிக்க முடியாமல்தான் செயல்படுகின்றன.

நமது வீடுகளில் கொசுக்கள் கடித்தால், அந்த நேரத்துத் தூக்கத்திற்காக மார்ட்டின் காயல்களையும், வேறுசில காயல்களயும் வாங்கிக் கொளுத்தி வைத்து விட்டுத் தூங்குகின்றோம். அப்போதாவது கொசுக்கள் நம்மைக் கடிக்காமலா இருக்கின்றன? வேண்டுமானால் கொசுக்களுடைய இசைக் கச்சேரிகள் குறையலாம் - அவ்வளவுதான்!