பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்

35

எனவே, ஒரு கருவிநோயாளிகளுக்கு இருப்பது என்ன வியாதி என்பதைக் கண்டுபிடித்துக் கூறுவதைப் போல, ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் உழைப்பு வைத்து அவனுக்கு என்ன நோய் வரும் என்பதை நம்மால் உணர முடியும்.

உழைத்து உழைத்து உருகுலைந்த ஓர் உழைப்பாளிக்கு மூட்டு, முதுகு, கழுத்து வலிகள் அவசியம் வந்தே தீரும். ஆள் வாட்டம் சாட்டமாக இருக்கிறாரே என்று எண்ணாதீர்கள். முதுமை காலத்தில் எப்பேர்ப்பட்ட பயில்வானாக இருந்தாலும், அவன் முதுமைக்கால நோய்களை அனுபவித்துத் தான் தீர வேண்டும்.

முதுமை வயது முதிர்ந்தோர். இந்த நோய்களின் பழக்க வழக்கங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த நோய்கள் ஏற்படுகின்றன. அந்த நோய்களால் தாக்கப்பட்டவர்கள் அந்தந்த நோய்களது வலிகளின் வலிமையை அனுபவிக்க வேண்டியுள்ளது.

இந்த வலிகளால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட உறுப்புகளை சிறிது ஆட்டினாலும், அசைத்தாலும், திரும்பினாலும் உட்கார்ந்தாலும், எழுந்தாலும்,மூட்டு முதுகு, கழுத்து வலிகளின் கொடுமைகளை நம்மால் தாங்க முடியாத அளவாக இருக்கும்.

வருமுன்னர் காக்கும் வயதிலே நாம் நமது உடல் இயந்திரத்தைச் சரிவரக் கவனித்துப் போற்றப் படாததுதான் காரணமாகும்.

நமது உடல் எலும்புகளின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் மிகவும் அவசியமான கால்சியம் பாஸ்பேட் மக்னீஷியம் போன்ற அவசியமான “நீயூட்ரியண்ட்ஸ்” - இன் பற்றாக்குறையினாலும், மற்றும் ஈயம் போன்ற நச்சுத் தன்மை வாய்ந்த கனிமப் பொருட்கள் உடலில் கலந்து