பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

முதுமைக் காலத் தொல்லை: பூச்சிகளினால் ஏற்படும்


விடுவதினாலும்,எலும்புகளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு வலிகளைக் கொடுக்கின்றது.

மூட்டுக்களில் இப்படிப்பட்ட வலிகள் ஏற்படுவதற்குக் காரணம், மூட்டுகளில் உள்ள எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராய்வது தான் காரணமாகும்.

இந்தக் கால் மூட்டுகள் கை மூட்டுகள் இடையே உள்ள சந்தியில் ஒருவிதமான எண்ணெய்ப் பசை நிறைந்த திரவம் இயற்கையாகவே சுரக்கின்றது.

இவ்வாறு சுரக்கும் இந்த திரவச் சுரப்பியின் தன்மை மாறுபட்டு, சுரக்கும் திரவத்தின் அளவு குறைகின்றதோ, அப்பொழுதே இந்த வலிகள் அதிகமாகின்றன.

அதனால், பொழுது விடிந்ததும் பொழுது போனதும் இந்த வலியின் தொல்லைகளைத் தாங்க முடியாத வேதனைகளை மனிதன் அநுபவிக்கின்றான். மூட்டு வ மனிதனுக்கு வரும் கதையே இவ்வளவுதான்.

ஆகவே, இந்த திரவக் குறைவைச் சரிசெய்வதால், இந்த வலிகளைக் குணமடையச் செய்யலாம்.

இந்த மூட்டு வலி நோய், ஏறக்குறைய 45 - 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருகின்றது. இதற்கு என்ன காரணம்?

வாலிப வயது ஷோக்குகளுக்காக, சேரக் கூடாதவரோடு சேரும் பழக்க வழக்கத் தோஷத்தாலும், குடி, கஞ்சா பீடி. சிகிரெட், பான்பராக், புகையிலை, மூக்குப்பொடி, பழக்குங்களும் போதைப் பொருள் ஆகியவற்றை உபயோகித்தல் உடல் நலனுக்குப் பொருந்தாத கெட்டக் குணங்களாகும் தீய பழக்க வழக்கங்களுமாகும்.

வாய்வு தொந்திரவு கொடுக்கக் கூடிய உணவுப் பொருள்களையும், புலால், காய்கறிகளையும் தின்போருக்கு