பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்


எனவே, அந்த தேய்ந்து போன எலும்புகளையும் வெட்டி எடுத்துவிட்டு பிளாஸ்டிக் செயற்கை எலும்புகளைத் தான் உடலுள்ளே பொருத்தியாக வேண்டும் என்ற நிலைமை

உதாரணமாக, ஒருவனுக்கு வயதானதும் தலைமயிர்கள் வெளுத்து விடுகிறது அல்லவா? அவன் என்ன செய்கிறான் தலை மயிர் நரையைப் போக்க?டை அடிக்கிறான். அதனால் மீண்டும் தலை மயிர் ஒரு கால கட்டம் வரை கறுப்பாகத் தோற்றமளிக்கின்றது. பிறகு மறுபடியும் மயிர் வெளுக்க வெளுக்க மீண்டும் மீண்டும் சாகும் வரை டை அடித்துக் கொண்டே இருப்பான் அல்லவா?

அதனைப் போலவே வயதானக் காலத்தில் அவனது உடலுழைப்புகளால் தேய்ந்து போன மூட்டு எலும்புகளை மருந்துகளாலும், மாத்திரைகளாலும் பழைய மாதிரியாக இருந்த எலும்புகளாக மாற்ற முடியாத காரணத்தால், பிளாஸ்டிக் செயற்கை எலும்புகளை அவனது உடலுக்குள்ளே பொருத்தியாக வேண்டிய அவசியம் உருவாகும். எந்த மருந்தும் மாத்திரைகளும் அதற்கு நிவாரணமாக இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.

மருந்து மகத்திரைகள் சாப்பிடுவதனால் ஒருவேளை தேய்ந்து போன மூட்டு எலும்புகளில் வலி இருக்காது. ஊசி போட்டுக் கொள்வதாலும் வேண்டுமானால் ஏற்படுகின்ற வலிகளின் தொல்லைகளிலே இருந்து தாற்காலிகமாக விடுதலை பெறலாமே தவிர, முன்பு இருந்த மூட்டுக்கள் அமைப்புகளோடு மனிதன் இயங்க முடியாது என்பது உறுதி.

ஆனால், பிளாஸ்டிக் செயற்கை உறுப்புகளைப் பொருத்திக் கொண்டால், வலிகள் நம்மை வாட்டாது. துன்பம் தராது. வலிகள் அறவே மறைந்து போகும். மூட்டுக்களுக்கு உரிய வலுவும் நமக்குக் கிடைக்கின்றது.