பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்

45


இந்த வலியைப் போக்க, சுரன்ஜான் கேப்ஸ்சூல் என்ற மூலிகை மருந்தை யுனானி டாக்டர் உள்ளுக்குக் கொடுப்பார். அதையும் சாப்பிட்டு வலியைப் போக்க முடியும்.

கால் மூட்டுகளில் வலி, பாதங்களில் ஏற்படும் அரிப்பு அல்லது ஊறல், அல்லது வலி, முதுகு மூட்டுக்களில் வரும் ஸம்பார் ஸ்பாண்ட லைட்டிஸ் என்ற நோய்களுக்கு எல்லாம் மூலிகை எண்ணெயை யுனானி டாக்டர்கள் தருகிறார்கள்.

எந்தெந்த இடங்களில் நோயோ, அந்தந்த இடங்களில் இந்த மூலிகை எண்ணெயைத் தடவலாம். சிவப்பு ஒளி நிறக்கதிர்கள் வீச்சையும் கொடுக்கலாம். இவையெல்லாம் நோயின் தன்மைகளுக்குரிய வகையில், டாக்டர்கள் முடிவு கட்டிக் கூறும் முறைகளை, மருந்துகளைத் தவறாமல் வேளாவேளைக்குச் செய்ய வேண்டும்.

முதுகு மூட்டு, கழுத்து போன்ற பகுதிகளில் வலிகள் உடையவர்களுக்கு வாய்வுப்பொருட்கள் அறவே ஆகாது. எனவே, அவசியமாகவும், கட்டாயமாகவும் வாய்வுப் பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும்.

இந்த மூன்று இடங்களிலும் நோய் வந்தவர்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? என்று கவலைப்பட வேண்டாம். சாதாரணமான வாழ்க்கையுடனும், மனைவியுடன் சந்தோஷமாகவும் வாழ முடியும். இன்பமும் அனுபவிக்க முடியும்.

கழுத்து வலி வந்துள்ளவர்கள், எப்போதும் கழுத்தில் காலர் போட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கழுத்து எலும்பு தேய்வதற்குக் காரணம். எண்ணெய்ப்பசைகழுத்தில் குறைவான பசைதான். எனவே, அந்த எண்ணெய் பசை மீண்டும் ஊறுவதற்கான சிகிச்சையை மட்டும் தவறாமல் எடுத்துக் கொண்டால் வலி நீங்கி விடும்–அவ்வளவுதான்.