பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்


இதற்கும் மேலும் ஒரு நிவாரண மருந்து யுனானி சிகிச்சை முறையில் உள்ளது. அது என்ன?

யுனானி டாக்டர்களிடம் நாம் சென்றால், அவர்கள் சிவப்பு வண்ண ஒளிக்கதிர் வீச்சுகளையும் கொடுப்பார்கள்.அதற்குப் பிறகு தைலம் போன்ற மருந்துகளையும் தருவார்கள்.

கழுத்து நோய் குணப்படுத்தக் கூடியதே. என்ன செய்யுமோ, ஏது பண்ணுமோ என்று எதற்கும் பயப்படத் தேவை இல்லை. இந்தக் காலம் தான் மருத்துவத்தில் விஞ்ஞான முன்னேற்றம் முன்னேறிக் கொண்டே வருகின்ற காலம். அதனால், மனிதனுக்கு எப்படிப்பட்ட நோய்கள் வந்தாலும் பணம் மட்டும் இருக்குமேயானால், போன உயிரைக் கூட திரும்பிக் கொண்டு வந்து ஒரு மணி நேரம், அரைமணி நேரம் கூட வைத்திருக்கலாம். எனவே பணம் தான் முக்கியமாகும். பணம் இருந்தால் உலகத்தில் சாதிக்க முடியாத காரியத்தை எல்லாம் சாதிக்க முடியும் அல்லவா?

கழுத்து வலியை எந்தச் சிகிச்சையாலும் தீர்க்க முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக ஒரு முறை உள்ளது. அது தான், மஸ்குலர் ஸ்டுமிலேட் என்ற ஜப்பானிய சிகிச்சை முறை. இந்தச் சிகிச்சையால் கழுத்து வலியை அறவே நீக்கிவிட முடியும்.

வலியால் கை துக்க முடியாமல் கஷ்டப்படுகிற நோயாளிகளுக்குப் புல்லி என்ற பயிற்சி மூலம் வலி திவாரணம் அளிக்கப்படுகிறது - மஸ்குலர் ஸ்டுமிலேட் என்ற சிகிச்சையும் பயன்படுத்தப்படும்.

பொதுவாக, இந்த வகையான நோய் வந்தவர்கள். சில வகையான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். நோயின் தன்மைக்கேற்ப, ஐந்து முறைகள் இத்தகைய சிகிச்சைகளை அளித்தால் கழுத்து வலியைக் குணப்படுத்தி விடலாம்.