பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்லை. நீங்கி நலமுடன் வாழலாம்

47


தேய்த்து ஊற வைப்பதை ஒரு கடமையாகச் செய்து வந்தால், வலிகள் வருவதற்கு முன்பே நாம் அவற்றைத் தடுத்து விடலாம்.

எண்ணெய்ப் பசை குறைவதால் தானே வலிகள் மூட்டுகளில் வருகின்றன. அந்தப் பசையை நாம் தினந்தோறும் எண்ணெயை அந்தந்தப் பகுதிகளிலே தேய்த்து ஊற வைத்தால் ஏற்கனவே இருக்கும் எண்ணெய்ப் பசையும் குறையாது, இருக்கும் எண்ணெய்ப் பசையுடன் நாம் தினந்தோறும் தேய்த்து விடும் எண்ணெய் பசை மேலும் மேலும் அந்தந்த இடங்களிலே சேரும். இவ்வாறு சேரும் போது உராய்வுகளால் வரும் தேய்மானங்களையும் நாம் தடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

எனவே, நமது உடலிலே கால்களில் உளள மூட்டுகளிலும், கழுத்துப் பகுதியிலும், முதுகுப்பகுதி எலும்பு இணைப்புகளிலும் தினந்தோறும் எண்ணெயைத் தேய்த்துக் கொள்வதை நாம் ஒரு கடமையாகச் செய்து வந்தால், இந்த வலிகள் வருவதை நம்மால் தடுத்துக் கொள்ள முடியும் என்பதை உணர வேண்டும்.

இந்த வலிகள் எல்லாம் ஒரு மனிதனுக்கு வருவதற்கு என்ன காரணம் என்பதை அந்த மனிதன் தெரிந்து புரிந்து கொண்டாலே போதும்.தலைக்கு தினந்தோறும் எண்ணெயை நாம் தேய்த்துக் கொண்டு தலையை வாரிக் கொண்டு வேலைக்கு நாகரிகமாகப் போவதை எப்படி ஒரு கடமையாக நினைக்கிறோமோ, அதே போல, நமது உடம்பு கை, கால், முதுகு, பாதம், கழுத்து பகுதிகளுக்கும் எண்ணெய்த் தேய்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அக்கறையுடன் செய்தாலே போதுமானது. எந்த வலிகளும் வருவதற்கு முன்னே நாம் அந்த வலிகளின் துன்பங்களைத் தடுத்துக் கொள்ள முடியும் என்பதை ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்வது நல்லது அல்லவா?