பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்


வலிகள் வந்த பின்பு டாக்டரிடம் ஓடுவதைவிட, வலிகள் வரும் முன்பே அந்தந்த மூட்டுகளின் தேய்மானங்களைக் குறைத்துக் கொள்வது நமது கடமை. அப்போது தான் நோயற்ற வாழ்க்கையை நம்மால் வாழ முடியும்.

பசி எடுக்கும் போது, நாம் வேளா வேளைக்குச் சோறு சாப்பிடுகிறோம் இல்லையா? தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கிறோம் இல்லையா? அவற்றைப் போல, மூட்டுகளின் பசிக்கு எண்ணெய்ப் பசை தான் சோறு என்று நினைத்து, வலிகள் வருவதற்கு முன்பேயே எண்ணெயை அந்தந்தப் பகுதிகளுக்கு தினந்தோறும் தேய்த்து ஊற விட்டாலே போதும்.

நமது உடல் வலிகள் வராத உடலாக இருக்கும். நாமும் நோயில்லா வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.நம்முடைய பணமும் மிச்சமாகும். டாக்டரைத் தேடி ஓட வேண்டிய அவசியமும் வராது.

✽✽✽✽✽