பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புப் போராட்டவீரர் & 99 இந்திமொழி பேசுவோர் தொகை பலத்தைக் காட்டியும், நாடாளுமன்றத்தில் 'பெரும்பான்மை என்னும் அகர பலத்தைக் காட்டியும் அரசின் பிடிவாதம் தொடர்ந்தது. உலகமுழுவதும் ஆங்கில மொழிமூலம் தொடர்பு கொள்ள வாய்ப்பிருந்தும் இந்தி பொதுமொழி என்னும் குறுகிய கண்ணோட்டத்தில் உலாவர முன் வந்துள்ள இந்தி ஆதிக்கவாதிகளைப் பற்றி கி.ஆ.பெ.வி. அவர்கள் வேடிக்கை யாகவும் கருத்தோடும் கூறியது: "பெரிய பூனைக்கு ஒரு துளை செய்த பிறகு குட்டிப் பூனைக்காக வேறு ஒரு சிறுதுளை செய்வது முட்டாள்தனம்; பெரிய சந்து வழியாகவே குட்டிப் பூனையும் வெளியேற முடியும். எனவே இரண்டு துளைகள் செய்தது வீண் வேலை" என்பதாக. 4. புதியதிட்டம்: 'தமிழ்நாட்டுக்கு ஆட்சி மொழியாக இருக்க தமிழ் ஒன்றே போதும்; வெளித் தொடர்புகட்கு ஆங்கிலம் போதும்' என்று தீர்மானித்துக் கையெழுத்து இட்ட வர்களில் அறிஞர் அண்ணாவும் அருமை இராஜாஜியும் அடங்குவர். கி.ஆ.பெ.வி இதில் கருத்து வேறுபாடு கொண்டார். அவர் மறையும் வரை இக்கருத்து வேறுபாடு மாறவில்லை. (அ) தமிழ் அன்பர்களும், இந்தி எதிர்ப்பு இயக்கத் தினரும் அவ்வியக்கத்தின் முன்னோடிகளான திராவிடக் கழகம் தி.மு.க. ஆகியோரும் அவ்வப் போது நடத்தி வந்த மறியல் போராட்டம் இந்திச் சொற்களை அழித்தல் போன்ற முறைகள் இந்தி ஏகாதிபத்தியவாதிகட்குச் செவிடன் காதில் ஊதிய சங்கொலி போலாயிற்று. (ஆ) 'மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் மாற்று மொழியாக விளங்கும். இதுபற்றிய முடிவு இந்தி பேசும் மக்களுக்கு விடமாட்டேன்; இந்தி பேசாத மக்களுக்கே 4. பூகவர்விசையை உலகுக்கு உணர்த்திய சு.ஐசக்தியூட்டலுக்குப்பூனை வளர்ப்பது ஒருவிருப்பத் தொழில். அவர் தாயும் குட்டியும் வெளியேறி இரண்டு துணைகள் செய்ததாக அவர் வாழ்க்கை வரலாறு கூறும்.