பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தி எதிர்ப்புப்போராட்டவீரர் & 103 களுடன் சேர்ந்து முன்னணியில் நின்றார். இந்தி எதிர்ப்பை முன் வைத்து காங்கிரசு ஆட்சியை ஒழிக்க, ஒன்பது அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்று கூடச் செய்து திட்டம் வகுக்கச் செய்தார் நம் அண்ணல்.' (ஓ) 1965 சனவரி 26இல் கட்டாய இந்தியை எதிர்த்துத் தடியடி பட்டும், குண்டடி பட்டும், தீக்குளித்தும் உயிர்நீத்த தமிழர்களின் தொகை 100க்கு மேற்பட்டிருக்கும். அக்கொடுமையைக் கண்டு நம் அண்ணல் எதுவும் உண்ணவும் இல்லை; எவருடனும் பேசவும் இல்லை. அந்த நாள் நினைவாக ஒவ்வொரு ஆங்கில மாதம் சனவரி 26இல் உண்ணா நோன்பும் பேசாநோன்பும் பல ஆண்டுகள் கடைப்பிடித்தார். (ஒள) இவரை தேசத்துரோகச் சட்டத்தின்கீழ் கைது செய்து வழக்கும் தொடர்ந்தது. திருச்சி மாவட்ட நீதிபதி இவருக்கு 6 திங்கள் சிறைத்தண்டனையும் ரூ. 1000/அபராதமும் விதித்தார். அபராதமும் கட்டி சிறையிலும் தண்டனையை அநுபவித்து 2 திங்களுக்குப் பிறகு சென்னை உயர்நீதி மன்றம் இவரை விடுதலை செய்தது. (ஃ) அப்போது இவர் ஓர்அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கையை அச்சிட்ட அச்சகத்தினர்மீதும், தம் பத்திரிக்கையில் இத்துண்டு அறிக்கை பற்றி செய்தி வெளியிட்ட நாளேடுகளின் மீதும் அரசு பாயத் தவறவில்லை. 7. பிறபகுதிகளில்: தமிழகத்தில் நடைபெற்ற கிளர்ச்சி ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய பகுதிகளிலும் பரவியது. வங்காளமும் தமிழகத்திற்குத் தோள் கொடுத்தது. இவற்றை அறிந்த திருமதி இந்திராக சந்தியும், திரு டி.சஞ்சீவய்யாவும் சென்னைக்குப் பறந்தோடி வந்து மாணவர் களையும் தலைவர்கள் சிலரையும் சந்தித்துப்பேசினர். அதிகம் பேசாத காமராசர் இந்த நெருக்கடியிலும் தம் கருத்தைத் தெரிவிக்காமல் வாய் மூடிக் கிடந்தார். மத்திய அமைச்சர்கள் 7.இன்றுள்ள தி.மு.க. ஆட்சிக்கு வித்திட்டதே இம்மாநாடு தான் என்று கருதினாலும் குத்தம் இல்லை.