பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. வாரி வழங்கும் வாக்குறுதிகட்குப் பொருள் இல்லை என்பதை மக்கள் அறிந்து கொண்டனர். 8. கிளர்ச்சியால் தன்மைகள்: மேற்குறிப்பிட்ட நிலை அடுத்த தேர்தலில் பிரதிபலித்தது. தேர்தலில் மாணவர்கள் முன்னணியில் நின்றனர். இதனால் பக்தவத்சலம், காமராசர் சுப்பிரமணியம், அளகேசன் உள்ளிட்ட காங்கிரசுகாரர்கள் படுதோல்வி அடைந்தனர். காமராசரை ஒரு கல்லூரி மாணவர் தோற்கடித்தார். இந்தியை எதிர்த்த தி.மு.க. ஆட்சியினரை வெற்றி வாகைசூட வைத்து அறிஞர் அண்ணாவை முதலமைச்சராகக் கொண்ட தமிழக அரசை அமையச் செய்து விட்டனர், தமிழக மக்கள்! 9. புதிய திருப்பம்: தமிழகத்தில் இந்தி ஆதிபத்தியத்தைத் தடுத்து நிறுத்தும் வல்லமை படைத்த தமிழக அரசு ஏற்பட்டுள்ளது. இது தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுவந்து அதற்கு உற்ற துணையாக ஆங்கிலம் மட்டும் இருந்தால் போதும் என்று திட்டவட்டமாகத் தீர்மானித் துள்ளது. இனி இந்தி 'வாலாட்டம் நடைபெறாது என்ற தெளிவான நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் மொழியறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர்திருவாயினின்றும், இந்தி எதிர்ப்பெய்கே? இந்நாட்டுணர்வெங்கே? முந்தி மொழிமுத் தமிழெங்கே-உந்தி வதிவாழ் திருச்சி வதியும் கி.ஆ.பெ. விசுவநாதம் இல்லாக் கால் என்ற வெண்பாவும் பிறந்து அண்ணலின் புகழை இந்தி எதிர்ப்புப் போராட்டம் நிலை நிறுத்திவிட்டது.