பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இல்லற நெறியாளர் மானிட வாழ்வில் திருமணம் ஒர் ஆயிரங்காலத்துப் பயிர் மானிட இனம் குன்றாது நடைபெற இறைவனால் வழிவழி வளர்ந்து வருவதற்கு வழங்கப்பெற்ற ஆற்றலைநல்ல முறையில் செயற்படுத்த ஆன்றவிந்த சான்றோர்களால் நெறிப் படுத்தும் முறையே திருமணம். இந்த ஆற்றல் இறைவனால் வழங்கப் பெற்றதாதலின் இதனை நன்கு விளக்குவேன். அறிவியல் அடிப்படையில் இந்த விளக்கம் அமைகின்றது. நமது உடல் உயிரணுக்களால் ஆனது. ஒவ்வோர் உயிரணுவிலும் இரட்டை நிறக்கோல்கள் (xx, xy steiro 13 போல்) உள்ளன. ஆனால் ஆணின் விந்தணுக்களிலும், பெண்ணின் முட்டையணுவிலும் ஒற்றை நிறக் கோல்கள் (x, x, y என்பது போல்) உள்ளன. இவை குழந்தைப் பருவத்தில் பக்குவப் படாத நிலையில் உள்ளன. அஃதாவது இயக்கமில்லாத நிலையில் (domant) உள்ளன. இவை ஆணின் முன்குமரப்பருவத்திலும், பெண்ணின் பூப்பெய்தும் பருவத்திலும் வளர்ச்சியடைந்து இயங்கும் நிலையை எய்துகின்றன. இந்த இரண்டுவகை ஒற்றையணுக்கள் ஒன்று சேர்வதால்தான் ஒரு புதிய உயிர் தோன்றும். இந்த இரண்டு வகை உயிரணுக்கள் ஒன்று சேர்வது எப்படி? இந்த இயக்கம் இரு பாலாரிடமும் காதலாக-ஒர் அற்புத ஆற்றல்-மலர்கின்றது. 1. Agâûâûâûâû - Chromosomes Ĝe,8°.