பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 & முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. கலவி நிகழ்கின்றது. இந்த அணுக்கள் இரண்டும் பெண்ணின் கருக்குழலில் (Fellopian tube) சந்தித்து இணைகின்றன. இணைந்த இக் கருவுற்ற அணு சிறிது சிறிதாக நகர்ந்து சென்று கருப்பையின் சுவரில் பதிந்து குழந்தையாக வளர்ச்சி பெறுகின்றது. இஃது எல்லாவுயிர்க்கும் பொருந்தும். எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்." என்று ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியரின் நூற்பா குறிப்பிடுவதாகக் கருதலாம். இதுவே அக இலக்கியத்தின் தோற்றுவாய், ஊற்று வாயாகவும் செயற்படுவது. சங்க இலக்கிய்த்தில் அகப்பாடல் களின் மிகுதியான எண்ணிக்கையும் அப்பாடல்களைப் பாடிய வர்களின் மிகுதியான தொகையும் புறத்திணைப் பாடல்களின் தொகையினும், பாடினோர் தொகையினும் மும்மடங்கு மிக்கிருத்தலைக் காணலாம். இதனால் சங்கப் புலவர்கள் அகம் பாடுவதையே சிறந்த புலமையென மதித்திருந்தனர் என்பது புலனாகின்றது. தலைமக்கள்: சங்க இலக்கியங்களில் வரும் தலை மக்களின் பெயர்களைச் சுட்டி உரைப்பதில்லை. இதனைத் தொல்காப்பியர், . மக்கள்துதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர்பெயர்கொளப் பெறாஅர்.” என்ற நூற்பாவில் வரையறுத்துக் கூறுவர். ஐந்திணைக் காதல் ஒழுக்கங்கள் மண்ணுலகிலுள்ள மக்கள் அனைவரையும் கருதியதாதலின் தனியொருவர் பெயர்சுட்டிஉரைக்கப்பெறும் மரபு இல்லை. இதற்குக் காரணம் என்ன? மக்கள் சமுதாயத்தின் எல்லா மாந்தரிடமும் காதல் நிகழ்ச்சிகளில் நல்லன என்று தேர்ந்து மேற்கொண்ட காதல் ஒழுக்கங்களைப் புனையும் 2. தேன். பொருள். பொருளியல் - 27 (இனம்) 3. அகத்தினை - 57 இனம்)