பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற தெறியாளர் & 107 வரம்புடையது.அகத்திணை. எனவே, ஒருவரின்தணிவாழ்க்கை யினின்றும் தோன்றாது, சமுதாயத்தின் பலர் காதல் வாழ்வினின்றும் இது தோன்றின்மையின், தனியாரின் பெயரிட்டு வழங்குதல் யாங்ஙனம் பொருந்தும்? எண்ணற்ற நம்பியரும், நங்கையரும் நாடோறும் சாலையிலும் சோலையிலும் பூங்காவிலும் படக்காட்சிக் கொட்டகையிலும் பிற இடங்களிலும் சந்திக்கின்றனர். யாரோ ஒருவன் யாரோ ஒருத்தியைக் காதலிக்கின்றான். பலரை விலக்கி ஒருவரைத் தேர்ந்து விழையும் இச்சிறப்புப் பார்வை ஆய்தற்குரிய அரிய சிக்கலாகும். எனினும் நம்முன்னோர் இதற்குக் காரணம் காணவும் முனைந்தனர். ஒன்றே வேறே என்றிரு பால்ஷயின் ஒன்றி உயர்ந்தே பால தாணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் ຮroຜ” (பால்-ஊழி) என்ற நூற்பாவால் காரணம் காட்டி விளக்குவர் தொல்காப்பியர். நல்லூழியின் ஏவலால் காட்சி நிகழும் என்பது அப்பேராசிரியரின் கருத்தாகும். 'கிழவனும் கிழத்தியும் காண்ப' என்று இருவரையும் எழுவாயாக வைத்துக் காட்டும் சிறப்பால் முன்னதாகக் காதலித்தவர் யார்? என்ற வினாவுக்கு இடம் வைக்கவில்லை என்பது சிந்திக்கத்தக்கது. இவ்வாறு ஊழ்வலியால் இணைந்து மணந்து கொண்ட வரின் இல்வாழ்க்கை அற்புதமாக நடைபெறுகின்றது. குறுந்தொகைத் தலைவியொருத்தி தன் கணவனை நோக்கிக் கூறுவது: இம்மை மாறி மறுமை ஆயினும் நீஆகியர் ம்ை கணவனை: யான்ஆகியர்நின்நெஞ்சு நேர்பவனே." - 4. கனவியல் - 5 5. குதுத் -49