பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. "மறுமையிலும் நீ என் கணவன்; நானும் நின் நெஞ்சு கவர்ந்தவள்’ என்று அமையட்டும் என்கின்றாள். இல்வாழ்க்கையின் தலையாய பயன் மக்கட்பேறு. மக்கட்பேறால் இம்மைப் பயனும் மறுமைப் பயனும் கைகூடும் என்பதனை அகநானூற்றுத் தலைவியொருத்தி தோழியிடம் கூறுவது: இம்மையுலகத்து இசையொடும் விளங்கி மறுமையுலகமும் மறுவின்று எய்துப செறுநரும் விழையும் செயிரதீர் காட்சிச் சிறுவர் பயந்த செம்ம லோர்எனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே வாகுதல் வாய்த்தனம் தோழி," இப்பாடலில் மக்கட்பேற்றின் பயன் தெரிவிக்கப் பெறுவதைக் கண்டு மகிழலாம். இந்த இரண்டினையும் ஒரு சேர வைத்து, மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு." என்ற குறட்பாவில் வள்ளுவப் பெருந்தகை சிறப்பிப்பதைக் கண்டும் களிக்கலாம். சங்க இலக்கியங்களில் வரும் தலைவன்-தலைவியரின் வாழ்க்கை குறிக்கோள் நிலையில் அமைந்தது. இந்தக் குறிக்கோளின்படி இயன்றவரை மணமக்கள் அமைய வேண்டும் என்பது திரு கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் நோக்கம்: தமிழ்ச்சான்றோர்களின் நோக்கமும் இதுவேயாகும். திருமண முறைகள்: இரண்டு முறைகள் இன்றும் வழக்கிலுள்ளன. . 8. அகம் - 66 7. குறன் - 80