பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற தெறியாளர் * 108 (அ) பழைய முறை. பழங்காலத்தில், தமிழகத்தில் ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த வயது, ஒத்த கல்வி ஆகிய இவற்றை யுடைய காளையும் கன்னியும் ஆகிய இருவரும் பெற்றோர் கொடுக்கக் கொண்டு, வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொண்டு இல்லறத்தை இனிது நடத்தி வந்தனர். பார்ப்பனர்களை வைத்துச் சடங்குகளைச் செய்து திருமணத்தை நடத்துகிற முறை இடைக்காலத்தில் புகுந்த ஒன்று. அம்முறை இன்றும் வழக்கில் உள்ளது. இமமுறைப்படி மணமக்களை வாழ்த்தும் போது 'தனம், தானியம், வெகு புத்திர லாபம், தீர்க்காயுசு, சுபமஸ்து' என்று வருகின்றது. இங்கனம் வாழ்த்துதல் தவறு என்பது கி.ஆ.பெ.வி. அவர்களின் கருத்து: காரணம் இது சட்டத்திற்குப் புறம்பானதாகப் போய்விட்டது. தனம்-தங்கக் கட்டுப்பாடு; தானியம்-தானியக் கட்டுப்பாடு; வெகு புத்திரலாபம்.குடும்பக்கட்டுப்பாடு, ஆகவே இவ்வாறு முடியாது; கூடாது. (ஆ) புதிய முறைகள் பழைய முறை இப்பொழுது மறு மலர்ச்சியடைந்து வருகின்றது. இப்பொழுது தமிழகத்தில் சுயமரியாதைத் திருமணம், சீர்திருத்தத் திருமணம், தமிழ்த் திருமணம், அரசியல் திருமணம், பதிவுத் திருமணம் எனப் பல்வேறு முறைகளில் திருந்திய திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றைக் காணும் கி.ஆ.பெ.வி. அவர்கள் இவையனைத்தும் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு ஒரே முறையில் நடைபெற வேண்டுமென்று விழைகின்றார். தமிழ்ப் பெருமக்களும் இம்முறையை ஏற்று விரும்பவேண்டும் என்பதும் இவர்தம் வேண்டுகோள். திருமண வாழ்த்து: (1) திருமணத்தில் வாழ்த்து கூறுவது ஒருவித சடங்காக வளர்ந்து விட்டது. புலவர் வீட்டுத் திருமணம் செல்வர் வீட்டுத் திருமணம் இவற்றுள்ளும் அச்சிட்ட வாழ்த்துமலர் படித்துக்கொடுக்கும் மரபு இன்று எம்மருங்கும் காணப்பெறும் மற்றொரு மரபாகும். 8. கக்கஞ்க்கு - பக்-11