பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 : மூத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. (2) பழங்காலத்தில் வாழ்த்தும்போது 'பதினாறும் பெற்று வாழ்க’ என்று மணமக்களை வாழ்த்துவது வழக்கம். இதில் பதினாறு பிள்ளைகளைப் பெறுவது என்பதல்ல. ஒருவருடைய வாழ்வு பெருவாழ்வாக அமைய வேண்டு மானால் அவர் பதினாறு பேறுகளையும் பெற்றிருக்க வேண்டும் என்பது கருத்து, அப்பேறுகளாவன: மாடு (செல்வம்), மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், தீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் என்பனவாகும். இவை பற்றி ஒரு தனிப்பாடலும் உண்டு. அஃது இப்போது நினைவில் இல்லை; இருக்கும் இடம் தேடவும் நேரம் இல்லை. எனினும், அபிராம பட்டர் அன்னை அபிராமியை இவற்றைத் தமக்கு அருளுமாறு வேண்டுவதாக ஒரு பாடல் உண்டு. கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர் கபடுவாராத நட்பும் கண்றாத வன்மையும் குன்றாத இளமையும் கழுவினி இலாத உடலும் சலியாத மனமும் அன்பகலாத மனைவியும் தவறாத சந்தானமும் தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள்வாராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு துன்பமில்லாத வாழ்வும் துய்யதின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய் அணையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே! ஆதிகட ஆசில் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுக்ரபாணி அருள்வாமி அபிராமியே!” என்பதுதான் அப்பாடல். 8.கீ.ஆ.பெ.வி நினைவுமலர் (முதலாம் ஆண்டு) - பக் 19-29