பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற நெறியாளர் * 11 தம் பிறப்பைப் பற்றி நகைச்சுவையாகக் கூறுவார்; 'யாரோ ஒரு நல்லவர் பதினாறு பேறுகளை எண்ணாமல் பதினாறு பிள்ளைகளை எண்ணி என் தாய் தந்தையர்களை வழங்கியதனால், நாங்கள் பதினாறு பிள்ளைகளாகப் பிறந்து விட்டோம். நான்தான் பதினாறாவது பிள்ளை. எனக்குத் தம்பியும் இல்லை; தங்கையும் இல்லை. இக்காலத்தில் இவ்வாறுவாழ்த்துதல் பொருந்துமர் பொருந்தது?" (3) மூன்றாவதாக வாழ்த்துவதில் ஒரு புதிய முறை உண்டு. புலவர்கள் எல்லாம் 'மலரும் மணமும் போல', 'வானும் நிலவும் போல', 'கரும்பும்சுவையும்போல', 'தகமும் சதையும் போல’, எள்ளும் எண்ணெயும் போல.... இப்படி வாழ்த்துகின்றனர். நல்லறிஞர்கள் பலர் இராம கிருஷ்ண பரமஹம்சரும் சாரததேவியும் போல', 'இராமனும் பிராட்டியும் போல’ என்று வாழ்த்துகின்றனர். அரசியல் தலைவர்களல் சிலர் காந்தியடிகளும் கஸ்துரி பாயும் போல', அண்ணாவும் இராணியும் போல' என்று வாழ்த்துகின்றனர் என்று குறிப்பிடுகின்றார் முத்தமிழ்க் காவலர். தமது நீண்ட வாழ்வில் பல்லாயிரக்கணக்கான திருமணங்களில் பங்கு பெற்று வருவதாகவும் 'எவராவது ஒருவர் நானும் என் மனைவியும் போல் வாழுங்கள் என்று வாழ்த்தியதாகச் சொல்லக் கேட்டதில்லை; சொல்ல துணிவும் இல்லை’ என்கின்றார். தொடர்ந்து, 'இன்று என் தலைமையில் திருமணம் செய்து கொள்பவர்கள் இருபது ஆண்டுகள் கழித்து அவர்கள்பங்குகொள்ளும் திருமணங்களில் அவர்கள் மணமக்களை வாழ்த்தும் போது, "என்னைப் போல, என் மனைவியைப் போல; என்னைப் போல, என்கணவனைப் போல வாழுங்கள்' என்று வாழ்த்த வேண்டும் என்று கூறுவார். தொடர்ந்து, 'பார்ப்பனரை வைத்துச் சடங்குகளைச் செய்யும் மணமக்கள் எவ்வளவு தவறுகளைச் செய்தாலும், இந்த நாடு தாங்கிக் கொள்ளும். இம்மாதிரி சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்ட மணமக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும், நாடு 10. மனமக்களுக்கு - பக் !