பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் எழுதியவர் பேராசிரியர் முனைவர் சுப்புரெட்டியார். கலைக்களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியராக வீற்றிருந்த பெருமையர். பெருநூல்கள் படைப்பதில் வெற்றி குவித்தவர். அறிவியல் தமிழ்நூல் பல எழுதிய சாதனையாளர். ஒரு நொடி கூட வீணாக்காது எழுத்துப் பணியில் தன்னை முழுதும் ஈடுபடுத்திக் கொண்ட 80ஆண்டு இளைஞர். நூற்றாண்டு விழா நாயகரின் பன்முக நலங்களைத் திட்பதுட்பத்துடன் விளக்கி யுள்ளார். பாட்டுடைத் தலைவருடன் பல்லாண்டு பழகிய கேண்மையர். தமிழக வரலாற்றையும் தமிழ்ப் பெருமக்கள் வாழ்வினையும் வாக்கினையும் தம் நெஞ்சில் தேக்கி வைத்து இருப்பவர். அவற்றை நீள நினைந்து நினைவலைகளாக எழுதும் பேராசிரியர் சுப் புரெட்டியாரின் படைப்புப் பணியில், எழுத்துப் பணியில் இந்நூலும் அவருக்குப் பெருமை சேர்க்கிறது. அண்மையில் தமிழ்க்கடல் இராய சொக்கலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழாவுக்காக இராய சொ.வின் வாழ்க்கை வரலாற்றை வளமான தமிழில் வடித்துத் தந்தார்கள். : ஒரே ஆண்டில் - 1999இல் நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சான்றோர் இருவரின் வாழ்க்கை வரலாற்றினை வெளியிடும் பேறு மணிவாசகர் பதிப்பகத்திற்கு மட்டுமே கிடைக்கும் ஒப்பரிய தமிழ்ப்பேறு. கடந்த 40ஆண்டுகளாக (1960-2000) துறைதொறும் தமிழுக்குத் தொண்டாற்றி வரும் பதிப்பகம் சான்றோர் வரலாறுகளைத் தமிழ்நாட்டு இளைஞர் உலகம் கற்று உயரவேண்டும் எனும் நன்னோக்கில் இந்நூலை வெளியிடுகிறது. பழந்தமிழ்நூல் காப்பகமாகவும், செம்பதிப்புக்களின் தாயகமாகவும், சான்றோர் சிந்தனைகளின் பதிவகமாகவும் மணிவாசகர் பதிப்பகம் விளங்குகிறது. இந்நூல் சிறப்பாக வெளிவரப் பெரிதும் துணை நின்ற என் மகன் மெ. மீனாட்சி சோமசுந்தரத் தி ன் தொடர்பணிகளுக்கு எ ன் வாழ்த்துக்கள். - . -