பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர் ஒரு மொழிப் போராளி. இனமான எழுச்சிக்கு இந்திப் போராட்டம் முதல் இவர் பங்கு பெற்று வெற்றி குவித்த போராட்டங்கள் பல. வாழ்நாள் முழுதும் கண்ணிய மிக்க தமிழர் தலைவராகத் திகழ்ந்தார். துறை தொறும் தமிழ் வளர்ச்சிக்குத் தொண் டாற்றினார். - காலம் போற்றுவதில், உரிய நேரத்தில் விழாவிற்கு வருவதில் இவருக்கு நிகர் இவரே. - சங்கப்புலவர் போல் பெருமித வாழ்வினர். இவர் காலத்தில் வாழ்ந்து வருவது நமக்குப் பெருமை. பெருமகனாரோடு 30 ஆண்டுகள் பழகும் பேறு எனக்கு வாய்த்தது. புலவர் குழுவில் வ.சுப. மாணிக்கனார் மறைவுக்குப்பின் அவரிடத்தில் என்னை நியமித்தார். முத்தமிழ்க் காவலருடன் அந்த மானுக்குக் கப்பல் பயணத்தில் உடன் சென்ற நாட்கள் என் வாழ்க்கையில் தேக்கமுடியாத அனுபவம். செயல்திறமிக்க செம்மலாய், வாழ்வாங்கு வாழ்ந்து செவ்வறம் பேணிய சான்றோராய் வாழ்ந்த முத்தமிழ்க் காவலரை வணங்குவது நல்லது; வாழ்த்துவது என் நாவிற்கு அமையாது. தலைசிறந்த தமிழர் தலைவரின் நூற்றாண்டு விழாவில் அவர்தம் வாழ்க்கை வரலாற்றை வெளியிடுவதில் களிபேருவகை அடைகிறேன். அறிஞர் பெருமக்கள் பலருக்கு நூற்றாண்டு விழா எடுக்க முயற்சி மேற்கொண்டு பலரின் நூற்றாண்டு விழாவைக் கண்ட முத்தமிழ்க் காவலருக்கு இன்று நூற்றாண்டு விழா. பல்லோர் உவகை என்னுள் பெய்தது போன்று பெருமகிழ்வு கொள்கிறேன். தல்லவரின், வல்லவரின் வாழ்க்கை வரலாற்று நூலை நூற்றாண்டுவிழா நாளில் வெளியிடுவதில் என்போல் எவரும் இன்களி மகிழ்நகை அடையமாட்டார்கள்.