பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மீட்சி இயக்கம் பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் 'முத்தமிழ்க் காவலன் மூத்ததமிழ்த் தலைவன் சித்த மருத்துவச் செம்மலான் - ஒத்த புலவர் குழுக் கண்டான் பொய்யில் அறிஞன் நிலவரை வாழ்க நிறைந்து' • 6ህ.öö}. Öለፕ. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் ஆற்றலை, ஆளுமையை, ஆற்றிய அரும்பணிகளை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார், பாட்டோவியமாக்கியுள்ளார். இந்தக் கோட்டோவியம் முத்தமிழ்க் காவலரை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. - சிவந்தமேனி, நெடிய தோற்றம், வெள்ளை உடை, மஞ்சள் நிற தங்க பிரேம் உள்ள கண்ணாடி, நிமிர்ந்த நடை உடையவர் விசுவநாதம். - ஆயிரம் பேர் உள்ள கூட்டத்திலும் இவர் யார் எனச் சுட்டி வினவுதற்குரிய தோற்றப் பொலிவினர். இவர் ஆற்றிய பணிகள் பல. அவற்றில் சிறப்பிடம் பெறத் தக்கன இருபெரும் பணிகள். 1. புலவர் குழுவைத் தோற்றுவித்தது. 2. தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்ற வித்தாக அமைந்தது. - . 49 புலவர் பெருமக்களை ஒருங்கிணைத்து, பிரெஞ்ச் அகாதெமி போல வலிவும் பொலிவுமுள்ள ஒரு குழுவை உருவாக்கினார்கள். மொழிக் காப்பு, மொழி வளர்ச்சி, மொழியைப் பரப்புதல் ஆகிய மூன்று வகைகளிலும் புலவர்குழு ஆற்றிய பணி காவியப்புகழ் உடையது. தமிழுக்கென்று ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்று 30 ஆண்டுகள் போராடி வெற்றி பெற்றவர். வாழ்நாள் முழுதும் தமிழின் மீட்சிக்கும், தமிழின் எழுச்சிக்கும் ஓயாது உழைத்தவர்.