பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப்பெருங்குடி மக்கள் முத்தமிழ்க் காவலரைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வதற்கும் இவ்விழாவில் கலந்து கொள்ள முடியாத ஏனைய தமிழ் ச் சான்றோர்கட்கும் முத்தமிழ்க் காவலரைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்கும் இந்நூல் துணையாக இருக்கும் என்பது அடியேனின் நம்பிக்கை. முத்தமிழ்க் காவலர் நூல்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து உதவிய அவர்தம் அருமை மகள், மங்கையர் திலகம் மணிமேகலை கண்ணன் அவர்கட்கு என். இதயம் கலந்த நன்றி. அடியேனை இச்சீரிய பணியில் ஈடுபடுத்திய அடியேனின் ஆ கூழுக்கும் நன்றி. பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்ட வேங்கட வாணனுக்கு என் சரணம் கலந்த வணக்கம். தேவனே நின்னை யல்லால் பிறிதொரு தேவை எண்னேன்; பாவனை நின்னின் அல்லால் பிறிதொரு பற்றும் இல்லேன்: யாவையும் காட்டக் கண்டேன்; என்னுளே நின்னைக் கண்டேன்; காவலா கருனை யானே! இனிமற்றோர் காட்சி உண்டோ? - அதிவீரராம பாண்டியர். 3. திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி - 64