பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் அறிவிலே தெளிவு. நெஞ்சிலே உறுதி. அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிகளின் மீது தனியர சானை, பொழுதெலாம் நினதுபேர் அருளின் நெறியிலே நாட்டம், கருமயோ கத்தில் நிலைத்திடல் என்றிவை, அருளாய் குறிகுணம் ஏதும் இல்லதாய் அனைத்தாய்க் குலவிடு தனிப்பரம் பொருளே! - பாரதியார் இந்த நூல் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் பொது வாழ்வில் அவர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றிய தொண்டுகள் பற்றி அவர் எழுதிய 25 நூல்களில் அமைந்த கருத்துகள் அடங்கியது. அவர்தம் நூற்றாண்டு விழாவில் பேசிய கருத்துக்கள் இவை. இவை முத்தமிழ்க் காவலர் பற்றிய அனைத்துச் செய்திகளையும் ஒரே இடத்தில் காணக் கூடிய ஒளிவிளக்கு. இறையருளாலும் அண்ணல் முத்தமிழ்க் காவலர் ஆசியாலும், முத்தமிழ்க் காவலர் மருமகன் T.S.K. கண்ணன் - மகள் மணிமேகலை 56ನೆT ST T ஆகியோர் அடியேனுக்கு வழங்கிய வாய்ப்பாலும் இந்நூல் அடியேனின் முத்தமிழ்க் காவலரின் நூற்றாண்டுப் பொழிவாக வெளி வருகின்றது. இன்று விழாவில் குழுமியிருக்கும் 2. பா.க. சுயசரிதை - 49