பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற நெறியாளர் ; 113 இவர்தம் அறவுரை இருபது கட்டளைகளாக அமைகின்றன. அவற்றின் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றேன். அறவுரை: - 1. சேற்று நிலத்தில் வழுக்கி வழுக்கி நடக்கின்றவனுக்கு ஒர் ஊன்றுகோல் துணைசெய்வதுபோல, வாழ்க்கையில் வழுக்கி வழுக்கி நடக்கின்றவர்கட்கும் ஒர் ஊன்றுகோல் தேவை. அது தனக்கு முன்பாக இல்லறத்தை நடத்தி வெற்றி கண்ட நல்லறிஞர்களின் வாய்ச்சொல்; அவ்வாய்ச் சொல்லை வாங்கி ஊன்றுங்கள்; வாழ்க்கை வழுக்காது என்று கூறுவார் வள்ளுவப் பெருந்தகை. இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே ஒழுக்கமுடையார்வாய்ச் சொல். (415) என்பது அவர் வாய்மொழி. வாய்ச்சொல் படித்தவருடைய வாய்ச்சொல், பட்டம் பெற்றவருடைய வாய்ச்சொல், பதவியிலிருப்பவருடைய வாய்ச் சொல், பணக்காரருடைய வாய்ச்சொல் என்று கூறாமல் 'ஒழுக்கமுடையார் வாய்ச் சொல்லை வாங்கி ஊன்றுங்கள்; வாழ்க்கை வழுக்காது’ என்று கூறியுள்ளார். இன்றைய மணமக்கள் இவ்வறிவுரையைப் பின்பற்றி வாழ்க்கையைத் தொடங்குவது நல்லது. இல்லாததும் உள்ளதும்: 2. ஒருவருக்கு நற்குண நற்செயல்களையுடைய மனைவி வாய்க்கப்பெற்றுவிட்டால் அவனுக்கு என்ன இல்லா விட்டாலும் எல்லாம் இருக்கிறது என்றும், ஒருவருக்கு நற்குண நற்செய்கைகளையுடைய மனைவி வாய்க்கப் பெறாவிட்டால் அவனுக்கு எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் ஒன்றும் இல்லையென்றும் கூறுவார் வள்ளுவர் பெருந்தகை. இல்லதென்இல்லவள்மாண்பானால் உள்ளதென் இல்லவன்மாணக் கடை. (53) என்பது அவர்தம் பொய்யாமொழி. இவ்வாய்மொழியை மணமக்கள் உள்ளத்தில் வைக்க வாழ்க்கை நடத்துவது நல்லது.