பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. 3. வீட்டுச் சண்டையிலிருந்து நாட்டுச் சண்டை வரை, கணவன் மனைவி சண்டையிலிருந்து காங்கேய நாட்டுச் சண்டை வரை நடைபெறுவதற்கு அடிப்படைக் காரண்ம் இரண்டே. ஒன்று பிறருடைய தேவையை அறிய மறுப்பது; மற்றொன்று பிறருடைய உரிமையை மறுப்பது. எங்கே பிறருடைய உரிமையை ஒப்ப மறுக்கின்றார்களோ அங்கே உடனே தோன்றுவது சண்டைதான். கணவனுடைய தேவையை அறிய மறுத்தாலும் மனைவியினுடைய உரிமையை ஒப்ப மறுத்தாலும், உடனே அங்கு தோன்றுவது சண்டைதான். அச்சண்டை ஒழிய மருந்தும் இரண்டே. ஒன்று விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை; மற்றொன்று சகிப்புத் தன்மை. இதை மணமக்கள் இருவரும் நன்குணர்ந்து வாழ்க்கையை நடத்துவது நல்லது. 4. ஆணாகப் பிறந்தவர்கள் எல்லோரும் ஆண் அல்லர்; ஆண்மையை உடையவனே ஆண். பெண்ணாகப் பிறந்தவர்கள் எல்லோரும் பெண் அல்லர்; பெண்மையை உடையவர்களே பெண். இத்தகைய ஆண்மையையும் பெண்மையையும் இன்றைய மணமக்கள் நிலைநிறுத்திக் காட்ட வேண்டும். அப்படிக் காட்டினால் அவர்கள் வாழ்வில் ஒர் ஒளிவீசுவதை அவர்களே கண்டு மகிழ்வார்கள். புகுத்த வீடு: பெண்ணாகப் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் பிறந்த குடிப் பெருமையை நிலை நிறுத்தியாக வேண்டும். பிறந்த குடிப்பெருமைகளை எல்லாம் புகுந்த வீட்டில் பேசிக் கொண்டிருப்பதல்ல. இதற்கு வழி அப்படிப் பேசினால், அது பிறந்த குடிக்குச் சிறுமையைத் தான் தேடித்தரும். பிறந்த குடிப் பெருமையை நிலைநிறுத்துவதற்கு ஒரேஒருவழிதான் உண்டு. அது புகுந்த குடிப் பெருமையை உயர்த்துவதன்மூலந்தான் முடியும். ஆகவே, இன்றைய மணமக்கள் புகுந்த குடிப்