பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதையும் சுட்டிக்காட்டுவர். இம்மூன்றையும், 'தேவைக்கு மேல் செலவு செய்வது பகட்டுத்தனம்; தேவை அளவு செலவு செய்வது சிக்கனம்; தேவைக்கும் செலவு செய்யாதது கருமித்தனம் ஒர் இலக்கண நூற்பாபோல் விளக்கியும் காட்டுவர்."இதை மணமக்கள்தம் வாழ்நாளெல்லாம் கடைப் பிடிப்பது நல்லது. சேமிப்பு: . 10. குடும்ப வாழ்க்கையில் சேமிப்பு இன்றியமையாத ஒன்று. வருமானம் முழுவதையும் செலவு செய்து வாழ்வது நல்லதல்ல. சேமிப்பது குறைவாக இருப்பினும் அது பல துளி பெருவெள்ளமாய் வியக்கத்தக்க முறையில் பெருகி விடும். உணவிலும், உடையிலும், பயணத்திலும், பொருளாதாரத் திலும், சேமிப்பிலும், - ஏன்? குழந்தை பெறுவதிலும் - சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அறிவுடைமையாகும் . சேமிப்பு செழுமை வாழ்வுக்குத் தோரணவாயில். ஒழுககம: 11. பார்ப்பனரை வைத்து, மந்திரம் கூறி, சடங்குகள் பலவற்றைச் செய்து திருமணம் புரிந்து கொள்கின்றவர்கள், வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டாலும் இவ்வுலகம் தாங்கிக் கொள்ளும். தமிழ்த் திருமணம், சீர்திருத்தத் திருமணம் புரிந்துகொள்ளும் மணமக்கள்சிறிது தவறினாலும் இவ்வுலகம் தாங்காது. பழிதுற்ைறத் தொடங்கிவிடும். அது மணமக்களுக்கு, அவர்களின் பெற்றோர்களுக்கு, அவர்கள் சமூகங்களுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும் பழியாக வந்து முடியும். ஆகவே, சீர்திருத்தத் திருமணம் புரிந்து கொள்பவர்கட்குப் பொறுப்பு அதிகம். 15. William Make Peace Thackaray gag siga, ganimali Vanity Fair (பகட்டுச் சந்தை) என்ற அழகிய புதினம் ஒன்றைப் படைத்துள்ளார். அதில் பல்வேறு பகட்டாளர்களைச் சித்தித்துக் காட்டியுன்னார். வாய்ப்பிருப்பின் மணமக்கள் அதைப் படித்து மகிழலாம். .