பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற தெறியாளர் * 121 அவர்கள் பிறரைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ள லாகாது; தங்களைப் பார்த்துப் பிறர் பின்பற்றுகின்ற முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. 'உயிரைக் காப்பதை விட ஒழுக்கத்தைப் போற்றிக் காப்பாற்றியாக வேண்டும்' என்பது பொய்யாமொழி. மணமக்கள் இதனை உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்கவேண்டும். அறம்: 12. 'அறம்' என்பது கடமை எனப் பொருள்படும். அறம்-31 ஆதுலர்க்கு அன்னம், ஒதுவார்க்கு உணவு, அறவைப் பிணம் சுடுதல், காதோலை, கருகமணி முதலியன. மக்களாகப் பிறந்தோர் அனைவரும் கடமையைத் தவறாது செய்தாக வேண்டும். பலனை எதிர்பாராது செய்தாக வேண்டும்." இரவில் படுக்கப்போகும்போது இன்று என் கடமைகளைச் செய்தேன்’ என்று மகிழ்ந்து படுக்கவேண்டும். நல்ல உறக்கம் வரும். நோய் நொடி அணுகாது. வாழ்க்கையில் வெற்றியைக் காணலாம். கடமையைச் செய்யத் தவறியவர்களிடம் கவலையும், உறக்கமின்மையும், நோயும், துன்பமும் உறவாடும். 'உண்மையான மகிழ்ச்சி என்பது அவரவர் கடமையைச் செய்வதில்தான் உள்ளது' என்பது நபிகள் நாயகப் பெருமானின் திருவாக்கு. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து வள்ளுவப் பெருந்தகை, 'அறத்தான் வருவதே இன்பம் (39) என்று வலியுறுத்தியிருப்பது நினைவு கூரத்தக்கது. இவற்றை மணமக்கள் இடைவிடாது கையாண்டு வருவது நல்லது. 13. 'அறம்' என்பது கொடை என்ற பொருளையும் தரும். இயன்ற வரை எளியவர்க்கு உதவுதல் வேண்டும். பசித்தோர் முகம் நோக்கி மனம் இரங்குதல் வேண்டும். 'பசிப்பிணி மருத்துவன் என்று கருதி பெறுவது நல்லது. ஐயம் இட்டு உண்' என ஒளவைப் பாட்டியின் வாக்கை உன்னுக. பகுத்துண்டு 16. இதையும் இதைத்தான் புகட்டுகின்றது. (18:68) {E. 2