பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 : மூத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. பல்லுயிர் ஒம்புதலும் (322) பழியஞ்சி நடந்து பகுத்துண்டு வாழ்தலும் (4) நல்வாழ்வுக்குத் துணை செய்யும் என்பது பொய்யாமொழி. 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" (ஆறாம் திருமுறை. பிள்ளைப் பெரு விண்ணப்பம்-62), 'இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்' என்பவையும் வள்ளற் பெருமானின் வாய் மொழிகள். 'ஈயென்று இரத்தல் இழிவு; அதைக் கேட்போரிடம் இல்லையென்று கூறுவது அதை விட இழிவு' (புறம்-204) என்பது புறநானூறு காட்டும் புது நெறி. இந்த அறநெறியும் அருள்நெறியும் மணமக்கட்கு வழிகாட்டும் வான் மறைமொழிகள். மகள் கொடை: 14. பெண்ணைப் பெற்றோர் திருமணம் செய்து கொடுப்பதை 'மகட்கொடை என்பர். பார்ப்பனர் கன்னிகா தானம் என்று வழங்குவர். இது தாரை வாத்துத் தரப் பெறுகின்றது. மகட்கொடையோடு பொருட்கொடையும் நல்குவர். இதனை முன்னர் (தமிழர்) "சீதனம்’ என்றனர். இப்போது இக்கொடை வரதட்சணையாகக் கோர வடிவம் கொண்டு பெண்ணைப் பெற்றோரை வெருட்டுகின்றது. இதனை ஒழித்துக் கட்ட இளையோர், முதியோர், சான்றோர் ஒன்று திரண்டு ஒழித்தேயாக வேண்டும். பெண்ணைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து அறிவாளியாக்கியதற்கு மணமகனாக வருபவன் நன்றி செலுத்த வேண்டியிருக்க, பெண்ணை ஏன் படிக்க வைத்தாய்? என்று கேட்டு அபராதம் போடுவது போன்றுள்ளது. ஒரு காலத்தில் இம்முறை பார்ப்பனர்களிடத்து மட்டிலும் அளவோடு நிலவியது. இன்று தமிழர்களிடத்து இது ‘விசுவரூபம் கொண்டு தமிழ்ப் பண்பாட்டையே சிதைத்து வருகின்றது. இம்முறையை அடியோடு ஒழித்துக் கட்டுவது தமிழ்ச்சான்றோர் கடமையாகும். புரிந்து கொள்ளல்; 15. வீட்டிலுள்ள முதியவர்கள் கணவனும் மனவிையும் சண்டையிடுவதைப் பார்த்தால் 'ஏன் நாயும் பூனையுமாக