பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லற நெறியாளர் : 123 அடித்துக் கொள்கின்றீர்கள்?’ எனக் கூறுவதுண்டு. கணவன்மனைவி சண்டையை நாய்-பூனை சண்டைக்கு ஏன் ஒப்பிடுகின்றனர்? என்பதைப் புரிந்து கொள்ள முடியாத கி.ஆ.பெ.வி. அவர்கள் நான்கு பூனையையும் ஐந்து நாய்களையும் வளர்க்கின்றார். இச்சண்டையை நேரில் பார்த்த பிறகுதான் உவமையின் பொருள் விளங்கியதாகக் கூறுகின்றார். நாயைப் பூனையும், பூனையை நாயும் புரிந்து கொள்ள முடியாது. நாய்க்கு மகிழ்ச்சி வந்தால் வாலை ஆட்டுகின்றது. பூனைக்குக் கோபம் வந்தால் வாலை ஆட்டுகின்றது. எப்படி ஒன்றையொன்று புரிந்து கொள்ள முடியும்?' என்பது முத்தமிழ்க் காவலரின் வினா. பூனைக்கு மகிழ்ச்சி வந்தால் தன் காதை நிமிர்த்தி விரைக்கின்றது. நாய்க்குக் கோபம் வந்தால் காதை நிமிர்த்து விரைகின்றது. 'எப்படி ஒன்றையொன்று புரிந்து கொள்ள முடியும்?' என்பது முத்தமிழ்க் காவலரின் வினா. இவற்றிலிருந்து நமக்குப் புலப்படுகின்ற உண்மை யாதெனில்: கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவேண்டும். அதுவே இல்லறம் நல்லற மாவதற்கு ஏற்ற வழி” என்பது. ந்தை வளர்ப்பது: 16. நம் நாட்டில் குழந்தை வளர்ப்பில் அதிகமான கவனிப்பு இல்லை. குறைவாகக் குழந்தைகளைப் பெறுவதே அவர்கள் நன்றாகக் குழந்தைகளை வளர்க்கத் துணைபுரியும். உணவை அதிகமாகத் தருவதை விட, சத்தான உணவைக் குறைவாகக் கொடுத்து வளர்ப்பது நல்லது. அவர்களைப் புழுதியில் புரள விடாமல், சிற்றினம் சேரடவிடாமல், தீய சொற்களைப் பேசவிடாமல் மிகவும் பாதுகாப்பாக வளர்த்தாக வேண்டும். - - பிள்ளைகளின் உடலை வளர்ப்பதை விட அறிவை வளர்ப்பதால் நலம் பயக்கும். பள்ளியில் படிப்பதால் மட்டும்