பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவைப் பெற முடியாது. பெற்றோர்களும் ஆசிரியர்களாக மாறி ஒழுக்கத்தையும் கல்வியையும் நாள்தோறும் கற்பித்து நன்னெறியில் நடத்தியாக வேண்டும். குழந்தைகள் தவறு செய்தால் அடித்துத் திருத்துவதை விட அதட்டித் திருத்தி அணைத்துக் கொள்வது நல்லது. தவறு செய்த பிள்ளைகளை 'ஏன் செய்தாய்?" என்று கேட்டு மிரட்டுவதை விட இனி அவ்வாறு செய்யற்க என்று அன்போடு அணைத்து வளர்ப்பது நல்லது. பெற்ற பிள்ளைகட்குப் பொருளைத் தேடி வைப்பதை விட, புகழையும் பெருமையையும் தேடி வைப்பதே பெற்றோர்களின் கடமையாகும். இதில் மணமக்கள் கருத்தைச் செலுத்துவது நல்லது. வாழ்வு உயிர்: 17. மணமக்களின் வாழ்வு உயர வேண்டுமானால் அவர்கள் தங்கள் உள்ளங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். உள்ளம் உயராவிடில் வாழ்வு ஒருபோதும் உயராது. வெள்ளத் தணைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத் தனையது உயர்வு. (595) என்பது வள்ளுவம். 'வெள்ளம் உயர உயர மலர் உயரும்; உள்ளம் உயர உயர நீ உணர்வாய்' என்பது இதன் பொருள். ஆகவே மணமக்கள்தங்கள்உள்ளத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். உள்ளத்தை உயர்த்திக் கொள்வது என்பது பெருமனம் படைப்பது என்பதாகும். அது தாமும் வாழ்வது, பிறரும் வாழ்வதே பெருவாழ்வு என்பது வள்ளுவர் கருத்து. இவற்றை மணமக்கள் உள்ளத்தே வைத்து வாழத் தொடங்குவது நல்லது. ஒத்த உரிமை: 18. ஒரு பல்கலைக் கழகத்தில் ஆண், பெண் இருவரும் அறிவியல் பட்டதாரிகள். இருவருக்கும் ஒத்த வயது, ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த உயரம், ஒத்த குலம் அமைந்த