பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. ు: கண், காது, வாய்: 19. திருமணம் நிறைவு பெறுகின்றது. முத்தமிழ்க் காவலரின் அறிவுரை: மணமகனுக்கு நேற்று வரை இரு கண்கள்; இனி அது கூடாது. நாளை முதல் மணமகளின் இரு கண்களையும் பயன்படுத்தி உற்றார் உறவினர்களையும், உலகத்தையும் நான்கு கண்களால் பார்த்து வாழ்வைத் தொடங்க வேண்டும். மணமகளுக்கு நேற்றுவரை இரு காதுகள். இனி அவை போதா. நாளை முதல் மணமகனின் இரு காதுகளையும் பயன்படுத்திக் கொண்டு நான்கு காதுகளால் உற்றார் உறவினரின் செய்திகளையும் உலகின் செய்திகளையும் கேட்டு வாழ்க்கையை நடத்தியாக வேண்டும். வாழ்வில் வெற்றி பெற இவ்விரண்டு மட்டும் போதா. மணமகனும் மணமகளும் தங்களின் வாய் இரண்டையும் நான்காகப் பெருக்கிக் கொள்ளாமலும், இரண்டாக வைத்துக் கொள்ளாமலும் ஒன்றாகக் குறைத்துக் கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் வாழ்வில் வெற்றி காண முடியும். கணவன் உண்டால் மனைவி உண்டது போல, மனைவி உண்டால் கணவன் உண்டது போல; கணவன் ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டால் மனைவி வாக்கு கொடுத்தது போல; மனைவி ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டால், கணவன் வாக்கு கொடுத்தது போல; கண்களும் காதுகளும் நான்கு; வாய் நான்குமல்ல, இரண்டுமல்ல, ஒன்று என்று ஆக்கிக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் வாழ்வில் மகிழ்ச்சியைக் காணலாம். இதனை மணமக்கள் ஒர்ந்து உள்ளத்திற்கொண்டு வாழ்வைத் தொடங்குவது நல்லது. வசழ்த்து: 20. வாழ்த்தி திருமணத்தை நடத்தி வைப்பது மட்டும் அல்ல. மேடையிலுள்ளாரும், வந்திருக்கும் தாய்மார்களும் பெரியோர்களும் ஆகிய அனைவரும் மணமக்களை வாழ்த்தியாக வேண்டும். அதற்கு நேரமின்மையால்