பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோரண வாயில் முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான் பின்னை பிறப்பறுக்கும் பேராளன்-தென்னன் பெருந்துறையில் மேய பெருங்கருணையாளன் வருந்துயரம் தீர்க்கும் மருந்து அவைத்தலைவர்.அவர்களே! அன்பு நிறைந்த தமிழ்ப் பெருங்குடிமக்களே! இந்த அவையில் குழுமியிருக்கும் பெரியோர்களே! இன்று இனிய நாள் எல்லோருக்கும். நம்முடன் இருந்து 96 ஆண்டுகள் வாழ்ந்து, ஈடும் எடும்பும் இல்லாத தமிழ்ப் பணிபுரிந்த முத்தமிழ்க் காதலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் நூற்றாண்டு விழா. அவர் காலத்தில் நாம் வாழ்ந் திருந்தோம் என்ற பெருமிதமும் பெருமையும் நாம் பெற்றோம் என்ற மனநிறைவும் அடைகின்றோம். திருச்சி மாவட்டத்தில் ஒரு சிற்றுரரில் பிறந்த (27-8-1916) ஒருவர் திருச்சி தலைநகரில் பிறந்த (14-12-1899) மற்றொருவரின் நூற்றாண்டு விழாவில் பேசுகின்றார் என்ற பெருமை பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அண்ணல் விசுவநாதத்தைப் பற்றிப்பேசப்புகுவது இந்த விசுவப் பெருமண்டலத்தை - அகண்டப் பெருவெளியைப் பேசப் புகுவதோடொக்கும். இரண்டும் இயலாத செயல்கள். எனினும், முயல்கின்றேன். இப்பெருமகனாரைப் போற்றிப் பேசும் பேச்சைப் பெரியோர் கேண்மை, முத்தமிழ்க் காதலர், வணிகர்திலகம், சித்தாந்தவித்தகர், சொல்லின் செல்வர், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரர், இல்லற நெறியாளர், மருத்துவ 1. திருவா. திருவெண்பத-4