பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவ மாமணி * 133 சிறிது கலந்து சாப்பிட்டால் சிறுநீரில் உள்ள இனிப்பு தொடக்க நிலையிலிருந்தால் மாறும். பாகற்காய் சூப்பும் பயன்தரும். (4) நெஞ்சு சளிக்கு: விரல் மஞ்சளை விளக்கிற் காட்டிச் சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உறிஞ்சினால் நெஞ்சு சளி, தலைவலி முதலியன நீங்கும். (5) மஞ்சட்காமாலை (பக். 20): நோய்களுள் பொல்லாதவற்றுள் இஃதும் ஒன்று. இந்நோயை முற்ற விடுதல் மூலம் உயிருக்கேஆபத்து நேரிடக் கூடும். இந்த நோய்க்குக்கை கண்ட மருந்து இது: சங்கம் வேர்ப்பட்டை - 1 வராகன் எடை அதிமதுரம் - 1/2 பலம் வெங்காயம் - 1/2 பலம் சீரகம் - 1/8 பலம் இந்த நான்கையும் அரைத்து பசுந்தயிரில் - கிடைக்கா விட்டால் எருமைத் தயிரில் - கலக்கி உண்ணவும்.காலையில் மட்டும் உண்ண, மஞ்சட்காமாலை நோய் நீங்கும். இச்சாபத்தியம். (6) மலம் கழிய (பக். 26): சோவிக் கீரையைக் கொண்டு வந்து இரசம் வைத்து இரவில் குடித்தால் காலையில் கட்டு மலம் கழிந்து, உடல் வலி தீர்ந்து, உடல் கலகலப்பாக இருக்கும். (?) தலைவலிக்கு (பக்.30); பச்சைக் கொத்துக் கடலையை வெந்நீர் விட்டு அரைத்து, நெற்றிப் பொட்டுகளில் தடவினால் தலைவலி உடனே நீங்கும். முலைப்பாலையும் நெற்றியில் தடவலாம். (8) பல் வலிக்கு (பக். 31): வேளை வேரையும் அருகம் புல்லையும் கசக்கி துணியில் வைத்துப் பல் வலி இடப்புறமிருந்தால் வலது காதிலும், வலப்புறமிருந்தால் இடது காதிலும், 3 சொட்டு மட்டும் பிழிந்தால், வலி உடனே நீங்கும்.