பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. வி. (ii) பூரான் கடித்தால் பனை வெல்லத்தை உண்டால் அதனால் உடலில் உண்டாகும் தடிப்பு உடனே மாறும். (ii) பிறந்த குழந்தை தவறிப்போய் பெற்ற தாய்க்குப் பால் கட்டி முலைக்குத்து ஏற்பட்டால் மல்லிகைப் பூவை வைத்துக் கட்டினால் உடனே குணமாகும். மல்லிகைப் பூ கிடைக்காத காலங்களில் வாழைப் பிஞ்சை அரைத்துத் தடவிக் குணம் காணலாம். (iv) நட்டுவாக்காலி (நண்டு தெறுக்கால்) கடித்தால் கொப்பரைத் தேங்காயை மென்று தின்றால், உடனே குணம் காணலாம். இந்த ஒற்றை மருந்து ஒரு வேளைதான். இரண்டாம் வேளை மருந்து தேவை இல்லை. இத்தகைய முறைகள் 96 அண்ணல் எழுதிய 'தமிழ் மருந்துகள்' என்ற நூலில் காணலாம். இந்நூலிலிருந்து முக்கியமானவற்றுள் சிலவற்றைக் காட்டுவேன். (1) பொன்னாங்கண்ணி (பக். 9): இஃது ஒரு வகைக் கீரையின் பெயர். அதை அருந்தினால் உடல் 'பொன்னாம் காண் நீ' என்று மாறும் என்பது கருத்து. தனியாகவும் பருப்புடனும் கலந்துண்ணலாம். வாய்க்கும் சுவையானது. 12 நாட்கள் தொடர்ந்து உண்டால் பலன் அதிகமாகத் தெரியும். அஃது அயச்சத்து நிறைந்த அருமையான பொருள். எங்கும் கிடைப்பது. (2) வயிற்றக் கடுப்புக்கு (பக் 12). சப்பாத்திக்கள்ளிப் பழச்சாறும், சீனியும் கலந்து மூன்று நாள் மாலை நேரத்தில் சாப்பிட்டால், வயிற்று உழைச்சல் தீரும். மூன்று நாட்களும் மிளகாய்க் காரம் கண்டிப்பாய்க் கூடாது. (3) சிறுநீரில் இனிப்பு (பக் 15): எள்ளுப் புண்ணாக்கை இடித்து மண் இல்லாமல் சலித்து எடுத்து, நாட்டுச் சர்க்கரை 6. பாசி நிலைய வெளியீடு. முதற் பதிப்பு மார்ச் 1953. இருபத்தென்தாம் பதிப்பு 1994.