பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவ மாமணி 135 சித்த மருத்துவ முறையில் சிறந்து திகழ்ந்த மருத்துவ மேதைகளும், பண்டிதமணிகளும் பலர் தங்களிடமுள்ள உயர்ந்த முறைகளை வெளியிற் காட்டிற்றிலர். பிறருக்குச் சொல்லிற்றிலர். தமக்குப் பிறகு வாரிசாக ஒருவரைத் தேர்ந்தெடுத்து சொல்லி வைத்தனர். அரசினருக்கும் அறிவித்திலர்; நூல்களாக எழுதி வைத்திலர். மருத்துவர் மறைய மறைய, ஒவ்வொருவரையும் புதைக்கப் புதைக்க, அவர்களுடன் சித்த வைத்திய முறைகளும் புதை பொருளாயின. புதை பொருள்கள்போல் இவர்களின் கருத்துப் பொருள்களைத் தோண்டி எடுக்க வழியே இல்லை. மேலும் காரணங்கள். தமது முன்னோர்கள் இத்தகைய தவற்றினை செய்திலர். தாங்கள் கண்டறிந்த அருமையான முறைகளைச் சுவடிகளில் பதிய வைத்தனர்; ஒலைகள் குவிந்தன. சொற்சுருக்கம் கருதி அனைத்தும் கவிதைகளில் அமைந்தன. தமிழ் மன்னர்களுடைய ஆட்சி அழிந்தது. ஆங்கில ஆட்சியினர் இவற்றைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டவில்லை. தவிர, காலத்தால் பாழ் பட்டன; கடல் கோளின் அழிவிற்குள்ளாயின. கறையான்களும் தின்றன. எஞ்சியிருந்தவற்றையும்' மக்கள் அறிவுக்குறையினால் ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் விட்டால் புண்ணியம் எனக் கருதி நீரில் விட்டனர். அழிந்து போனவை: பல்வேறு குறிப்புகளால் அழிந்து போன நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது. அவை: 1. அகத்தியர் பன்னிரு காண்டம் 2. போகர் எண்ணாயிரம் 3. கோரக்கர் மூவிலைப் பயன் ஆயிரம் 4. கொங்கணவர்- மூவாயிரத்து நூறு 5. கோரக்கர் வெண்பா ஏழாயிரம் 7. இலக்கியங்களைக் காத்த டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் போல் இத்துறையில் இக்க ஒருவரும் பிறக்கவில்லை.