பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. தலையில் உச்சிக் குடுமி மறைந்து 'கிராப்புத் தலை காட்சி வருகின்றது. பண்ணார் கிராப்புத் தலையும் பயனில கண்ணாடி போடாத கண். என்ற புதுக்குறளும் பிறந்து விட்டது. இஃதுடன் இது நிற்க. அண்ணலின் பேச்சிலும் எழுத்திலும் வரும் அறிவுரைகளும் கருத்துகளும் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இராமல், அவை அதுபவத் தெளிவாக வெளிவரும்போது அவை ஆற்றல் மிகுதியுடன் மக்கள் உள்ளத்தில் பதிகின்றன. அண்ணலின் எல்லா நூல்களிலும் இவை இலை மறை காய்களாகத் தென்பட்டாலும் அடியிற் கண்ட நூல்களில் அதிகமாகத் தென்படுவதைக் காண்கின்றேன். 1. அறிவுக்கு உணவு (1953ர். இந்த நூலிலுள்ள சிறந்த கருத்துகள் சிறு வடிவத்தில் அமைந்துள்ளன. இவை தெறிக்கும் சொற்களால் அமைந்த தெளிவான நல்லுரைகள். கற்பனை உலகத்தை நடைமுறைக்கு ஈர்த்து அமைவதும் இங்கில்லை. பழைய வரலாற்றை இன்றைய வாழ்வுக்குப் பாய்ச்சி இணைப்பதும் இங்கு இல்லை. நடைமுறையை மறவாமல் வாழ்வைக் காக்கும் அநுபவ அறவுரையே இங்கு உள்ளது. எடுத்துக்காட்டுகள்: சில எடுத்துக்காட்டுகளை ஈண்டுத் தருகின்றேன். (1) ஏமாற்றம் என்ற தலைப்பில் வருவது (பக். 7): யோக்கியன்தன்னைப் போலவே பிறரும் யோக்கியராய் இருப்பர் என எண்ணி ஏமாறிக் கெட்டுப் போகிறான். அயோக்கியனும் தன்னைப் போலவே மற்றவர்களும் அயோக்கியர்களாய் இருப்பார்கள் என எண்ணி ஏமாறிக் கெட்டுப் போகிறான். 2. பத்தொன்பதாம் பதிப்பு (1994). பாரி நிலைய வெளியீடு.