பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபவநாயகர் & 139 (2) வஞ்சகர் உள்ளம் (பக். 3): பாலை வனத்தில் புல்லைக் காணலாம். எங்கு? -அணையருகில். கோழைகளிடத்தில் வீரத்தைக் கூடக் காணலாம். எப்போது? - உரிமை பறிபோகும்போது. கார்காலத்து இருளில் வெளிச்சத்தைக் கூடக் காணலாம். எப்போது? - மின்னும்போது. வஞ்சக மக்களின் உள்ளத்திலுள்ளவற்றை மட்டும் எங்கும், எப்போதும், எவராலும் காணமுடியாது. (3) நகைச்சுவை (பக். 9): சிரிப்பது உடல் நலத்துக்கு ஏற்றது என்பது மருத்துவ அறிஞர்களின் கருத்து.' மக்களைச் சிரிக்க வைக்க நகைச்சுவை ஒரு சிறந்த கருவி. இக்கருவியை விழிப்பாகக் கையாள வேண்டும். இன்றேல், இது தீமையையே விளைவிக்கும். - நகைச்சுவை வேறு; நையாண்டி’ வேறு. நகைச்சுவை செல்லுகின்ற பாதையில் ஒரு மயிரிழை தவறினாலும் நையாண்டியாகக் காட்சியளித்து விடும். நகைச்சுவை அறிஞர்களை மகிழ்விக்கும்; நையாண்டி மற்றவர்களை மகிழ்விக்கும். ஒருவன் கூறியது நகைச்சுவையா? நையாண்டியா என்பதை அறிய விரும்பினால் அதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தவர்கள் அறிஞர்களா? மற்றவர்களா? என்பதைக்கொண்டு அறிந்து கொள்ளலாம். (4) தம்பீ கவனி (பக். 13): சுறுசுறுப்பாயிரு! ஆனால் படபடப்பாயிராதே! பொறுமையாயிரு. ஆனால் சோம்பேறியாயிரதே பற்றற்று இரு! ஆனால் காட்டுக்குப்போய் விடாதே? 3. உளவியல் அறிஞர்களின் கருத்து கூடத்தன். 4. இன்று பெரும்பாலும் பேசும் படங்களில் கான்பது நையாண்டியையே.