பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. இல்லறத்தை நடத்து! ஆனால் காமவெறியனாயிராதே! வீரணாயிரு! ஆனால், போக்கிரியாயிராதே! அன்பாயிரு! ஆனால் அடிமையாயிராதே! கொடையாளியாயிரு! ஆனால் ஓட்டாண்டியாயிராதே! சிக்கணமாயிரு! ஆனால் கருமியாயிராதே! இரக்கம் காட்டு! ஆனால், ஏமாறிப்போகாதே! (5) தமிழ் மகனே! (பக்.15): உனது மொழியைத் தமிழ் என்று கூறு: உனது கலையைத் தமிழ்க்கலை’ என்று சொல்: உனது பண்பை தமிழ்ப்பண்பு எனக் கருது: நீ தமிழன் என நினை! மறவாதே! - மறந்தால் உனக்கு வாழ்வில்லை! (6) னது? (பக். 19,20): துன்பத்திற்குப் பிறப்பிடம் எது? இன்பத்திற்கு அழிவிடம் எது? தோல்விக்கு பிறப்பிடம் எது? வெற்றிக்கு அழிவிடம் எது? தீமைக்குப் பிறப்பிடம் எது? நன்மைக்கு அழிவிடம் எது? வறுமைக்குப் பிறப்பிடம் எது? வாழ்விற்கு அழிவிடம் எது? விடை: சோம்பல். (7) நாட்டை அழிக்கும் அறுவர் (பக்.21): நாணயமில்லாத வியாபாரி நேர்மையில்லாத அரசியல்வாதி ஒழுக்கமில்லாத சீர்திருத்தவாதி