பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. 'அமீனா புகுந்த வீடும் பொறாமை புகுந்த வீடும் உருப்படா என்பது உண்மை. பொறாமை புகுந்த தெரு, சிற்றுர், நகரம், நாடு என்பவை கேடு அடையும். எத்தனையோ மன்னர்கள், எத்தனையோ நாடுகள், இயக்கங்கள், சமூகங்கள், அமைச்சரவைகள் ஆகியவற்றில் இந்த ஆமை புகுந்து நாசமாக்கியுள்ளது. இந்த ஆமை பேராசைத் தண்ணிரில் வாழுமேயன்றி பெருந்தன்மைத் தரையிலே வாழாது. ஆமை தரைக்கு வந்தால் மடியும். பொறாமை பெருந்தன்மைக்கு வந்தால் மடியும். ஆகவே, நாட்டின் நலனைக் கருதி மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இல்லாமை தோன்றாமையும், தோன்றின் இருக்க இடமில்லாமையையும் செய்ய வேண்டியது இன்றியமையாததுமாகும். இந்த ஆமையை நேரடியாக ஒழிக்க இயலாவிட்டால் குறுக்கு வழியால் ஒழிக்கலாம். அது வைரத்தை வைரத்தால் அறுப்பது போல ஆமையை ஆமையால் அழிப்பதாகும் - இந்த ஆமைக்குப் பகையாமைகளும் உள்ளன. శ్రీశ}ఘ: இம்மையினில் தீமைகளை எண்ணாமை; எக்காலும் பொய்மைதனைச் சொல்லாமை; வஞ்சகத்தால் பிறர் பொருள்களைக் கவராமை; வலுவிருந்தும் நெறியுடைமை தவறாமை, கள்ளத்தால் கொடுமையினைச் செய்யாமை; கண்ணற்றோர் உரிமைகளைப் பறியாமை ஆகியவையே பகை ஆமைகளேயாம். இந்த ஆமைகள் எவரையும்.பகையாமை என்ற ஆழமான உள்ளத்தில் தான் வாழும். தீண்டாமைப் படுகுடியில் பிறந்து, பொறாமைப் புழுச் சேற்றில் புரண்டு, நியாயச் செயல்களில் உருண்டு ஆதரவு இல்லாமல் அழிந்த மக்களை அதிகமாகக் கொண்ட நம் தமிழ்நாடு - சுதந்திரம் பெற்றும் பொறாமையால் சுழன்று