பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபவ நாயகர் : 145 அல்லலுற்று அவதிப்படும் நம் தமிழ்நாடு - வாழ வேண்டும் என்றால் அதற்கு வழி ஒன்றே ஒன்று உண்டு. அது எந்த வழி? 'அது இந்நாட்டில் சீர்திருத்தக் குளம் ஒன்றை வெட்டி, அதனுள் தீந்தமிழ் ஆற்றதனைக் கண்டு, நல்லொழுக்க நீரை நிறையச் செய்து, என்றும் நன்மை விளையும் மலர்தனையே விளைத்து, பார் முழுதும் அந்நீரைப் பருக, அதனுள் பகையாமைதனை வளர்த்து வாழ்வோம்’ என்பதேயாகும். இந்த 'ஆமை விளையாட்டால் சிறுவர்க்குச்சுவையாக வழிகாட்டுவதுபோல் வளர்ந்தவர்கட்கும் வழி காட்டும். கலைமாமணியை வாழ்த்தி இத்துடன் இந்நூலை நிறைவு செய்வோம். 3. ஐந்து செல்வங்கள் (நவம் - 50°. தமிழ் மேடையுலகி லும் தமிழ்த்தாள்.உலகிலும் சிறப்புடன் திகழும் திரு கி.ஆ.பெ. விசுவநாதம் எழுதிய ஐந்து கட்டுரைகள் ஐந்து செல்வங்கள் என்ற அழகிய திருநாமத்தோடு வெளி வந்த நூல். இவரே ஒரு செல்வர். செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல். இந்நூலால் நம் அண்ணல் தமிழர்களாகிய செழுங் கிளையைத் தாங்குகின்றார். இவர் காட்டும் ஐந்து செல்வங்கள்: (1) தாய்ச் செல்வம்: (2) சிந்தனைச் செல்வம்; (3) கிழட்டுச் செல்வம்; (4) உடல் செல்வம்: (5) திருச்செல்வம் என்பவையாகும். (1) தாய்: செல்வம் பலவகைப்படும். பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்துவதில் "பதினாறு பிள்ளைகள்' என்பது பொருளல்ல. அது மனை, மனைவி, மக்கள், தாய், நெல், நீர், நிலம், கால்நடை, கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, பொன், பொருள், போகம் என்பவையாகும். - 8. இதன் பதினான்காம் பதிப்பு (திசம்பர் 1991), பாசி நிலைய வெளியிடு.