பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 : முத்தமிழ்க்காவ்லர் கி.ஆ.பெ. வி. இந்தப் பதினாறிலும் சிறந்தது தாய் செல்வம். பிற செல்வங்களை இழந்து விடுவோமானால் முயன்றால் அவற்றைத் திரும்பப் பெற்று விடலாம். தாய்ச் செல்வத்தை இழந்து விட்டால் அதனை எவராலும் எவ்விதத்திலும் பெற முடியாது. இதனை வள்ளுவர், பாவேந்தர், மணிவாசகர் போன்ற பெரியார்களின் கூற்றுகளை வைத்து தம்பிக்கு விளக்குவர். தம்பி என்பது அண்ணலுக்கு இளைய அனைவரும் அவருக்குத் தம்பியரே. (2) சித்தனைச் செல்வம்: இஃது அண்ணனும் தம்பியும் உரையாடுவதுபோல் அற்புதமான உரையாடலை அமைத்து சிந்தனை அனைவர்க்கும் ஓர் இன்றியமையாத செல்வம் என்பதனை விளக்குகின்றார் நம் அண்ணல். 'பேசுவது குறைவாக இருக்கட்டும். கேட்பது அதிகமாக இருக்கட்டும். கேள்வி ஒன்றுதான் சிந்தனைக்குக் கருவூலமாக இருந்து வருகின்றது. வள்ளுவரும் செல்வத்துள் எல்லாம் தலையாய செல்வம் செவிச் செல்வம்' என்று அறுதியிடுவார்." "சிந்தித்தால் யாவும் நன்கு விளங்கும். உண்மையைக் காண, சிந்தனை ஒரு சிறந்த கருவி. திருவள்ளுவர் செவியைச் சிந்தனை என்றது எல்லோருடைய செவியையும் அல்ல. சிந்திக்கும் ஆற்றலுடைய மக்களின் செவியை மட்டுமே. சிந்தனையற்ற மக்களின் செவியானது செல்வமும் அல்ல; செவியுமல்ல; அஃது ஒரு துளை." என்பவை இக்கட்டுரையின் மூலக்கருத்துகள். (3) கிழட்டுச் செல்வம்: இக்கட்டுரையும் ஒர் அற்புதமான உரையாடலாக அமைந்துள்ளது. இதில் பங்கு பெறுபவர்கள் ஒரு பாட்டி, பேத்தி கண்ணம்மாள், பக்கத்துச் செல்லம்' என்ற ஒரு சிறுமி. இதில் புலனாகும் உண்மை. 'கிழடுகள்தாம் நம் நாட்டின் உயர்ந்த செல்வங்கள். அவர்களிடம் நிறைந்துள்ள அநுபவக் குவியல்கள் எதிர்காலக் கிழடுகளாகிய நமக்கு இப்போது தேவை. கிழட்டுச்