பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுபவ நாயகர் * 147 செல்வங்களை இழந்தால் நாம் ஒரு நற்செல்வத்தை இழந்தவர் களாவோம். விரிவஞ்சி மற்ற இரண்டையும் காட்டவில்லை. 4. ஆறு செல்வங்கள் (ஆகஸ்டு 64): இந்நூல் (1) கல்விச் செல்வம் (2) கேள்விச் செல்வம், (3) அருட்செல்வம், (4) பொருட்செல்வம், (5) அறிவுச் செல்வம், (6) மக்கட் செல்வம். முத்தமிழ்க் காவலர் தேனியனையர். தாம் தேர்ந்து பயின்ற நன்னூற் பொருள்களை வகைப்படுத்திச் சின்னூல் உணர்ந்தாரும் கற்றுப் பயன் பெறும் வகையில் நூல் வடிவமாக்கித்தந்துள்ளார். உருவிற் குறியதாயினும், உறுபயன் அளிப்பதில் 'தானே உவமை தனக்கு. இஃது அறிவின் களஞ்சியம். தெவிட்டாத தேன் பிளிற்றும் தேனடை. (1) கல்விச் செல்வம்: தமிழ் இலக்கியத்தில் கல்வி பற்றியும் அதன் தொடர்பாக உள்ளவை பற்றியும் காணப் பெறும் கவிதைகளின் கருத்துகளை அழகிய எளிய உரைநடையில் தந்துள்ளார் அண்ணல், கல்விச் செல்வத்தின் பெருமையை "ஈடு இலாச் செல்வம்” என்பார் திரு வி.க. கேடில் விழுச்செல்வம் கல்வி (குறள் - 400) என்பார் நம் வள்ளுவப் பெருந்தகை. ஒரு நாட்டின் மன்னனுக்குப் பிற நாடுகளில் அவ்வளவு சிறப்பு இராது. ஆனால் கற்றோர்க்குச் சென்றவிடம் எல்லாம் சிறப்பு. பொருட்செல்வம் அனைத்தையும் அதை உடையவனே வழி நடத்துவான். கல்விச் செல்வம் ஒன்று மட்டுமே அதனை உடையவனை வழிநடத்தும். இப்படிப் பல கருத்துகளைக் கொண்டவை. இளைஞர்களை நோக்கி அமைந்ததால முடிவு அவர்கட் கேற்றவாறு அமைகின்றது. 'படி, நன்றாகப் படி: வாழ்வதற்காகவே படி, படிப்பதற்காகவே வாழ். எல்லாவற்றையும் படிக்காதே. படிக்க வேண்டியவற்றை மட்டும் படி. படித்து, அறிந்தவற்றைச் சிந்தித்து உணர். 9. இதன் ஆறாம் பதிப்பு 1994இல் வெளிவந்தது. பாரி நிலைய வெளியீடு.