பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநுபவ நாயகர் : 149 கேட்டிருக்க வேண்டும். அதிகம் கூறுவானேன்? காது கேட்க முடியாதபோது வாயால் பேசமுடியாது எனக் கூறிவிடலாம். 'ஆகவே கேள்விச் செல்வத்தைப் பெறு; அதைக் கேளாமற் கேட்டுப் பெறு. கேட்டுத்தான் பெற வேண்டும் என்ற நிலை வந்து விட்டால் மெதுவாகக் கேள். அதிலும் ஒழுக்க முடையவர்களிடம் மட்டுமே கேள். அவர்களிடமிருந்து வரும் விடையானது சேற்று நிலத்திலே வழுக்கி நடக்கிறவனுக்கு ஊன்று கோல் துணை செய்வது போல் உன் வாழ்க்கைப் பாதையில் வழுக்காது நடக்க உயர்ந்ததோர் ஊன்றுகோலாக நின்று உதவும்.” 'எப்பொழுதும் நல்லவற்றைக் கேள். அல்லது எவ்வளவாவது நல்லனவற்றைக் கேள். அவ்வளவு உனக்குச் சிறப்பும் உயர்வும் உண்டு. எனைத்தானும் நல்லவை கேட்க’ (குறள்-48) என்ற வள்ளுவத்தைச் சொல்லிக் கொண்டிரு." இவை அண்ணலின் அறவுரைகள். ஏனைய நான்கு செல்வங்களும் விரிவஞ்சி விடப் பெற்றன. 5. மாணவர்களுக்கு (1988)”. 1987-இல் காஞ்சி பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசிய பேச்சும்’ அதற்குச் சில ஆண்டுகட்கு முன்னர் திருச்சி புனித சிலுவைக் கல்லூரி ஆண்டு விழாவில் பேசிய பேச்சின் குறிப்புகள் அடங்கியது. 'ஒழுக்கக் கேடுகளை வெளியிடும் திரைப்படங்களைப் பார்த்தும், ஒழுக்கக் கேடுகளை எழுதும் கிழமை இதழ்களைப் படித்தும் கெடுகிற மாணாக்கர்களில் சிலரேனும் இந்நூலைப் படித்துத் திருந்துவார்களாயின் மகிழ்வேன்' என்பது அண்ணலின் எதிர்பார்ப்பு. 10. இதன் இரண்டாம் பதிப்பு (1993) பாசி நிலைய வெளியீடு. 11. பள்ளியின் தலைமையாசிரியர் இந்த ஒருமணிநேரப்பேச்சைஒலிப்பதிவுசெங்துகோடுத்ததால் பேச்சு அப்படியே அமைந்தது.