பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 * முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. இதிலுள்ள சில சுருக்கமான கருத்துகள். கல்வி வழியே மாண்புடையவர்களாக ஆக்கும் பருவமே மாணாக்கப் பருவம். இப்பெருமை இப்பருவத்தில் தான் இருக்கும். இதற்கு முன்பும் இராது. இப்பருவத்தை மாணாக்கர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணலின் பேச்சுகள் பேச்சாளர்கட்கெல்லாம் இலக்கணம் போல் அமைவது. கருத்தைத் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டுவார். சொற்பொழிவை எடுப்பு, தொகுப்பு என்ற முறையில் அழகாகத் தொடங்கி கருத்துச்செறிவோடு, பன்னூற் புலமை வெளிப்பட, நகைச்சுவை ஆங்காங்குத் தலைகாட்ட விளக்கங்களுடன் கூறிச் செல்லும் அண்ணல் அதனை அற்புதமாக முடிப்பதிலும் வல்லவர். பேசின தலைப்பு "மானவரும் தமிழும்' என்பது. இதில் அவர் வற்புறுத்தினது: " கல்வி, ஒழுக்கம்’ என்பவை. கேடில் விழுச்செல்வம்” (400) என்று வள்ளுவப் பெருந்தகையும் ஈடு இலாச் செல்வம் என்று திருவி.க.வும் கல்வியை வெள்ளத்தால் போகாது, வெந்தழலால் வேகாது” என்று பழம் பாடல் கருத்தையொட்டி விளக்குவார். மேலும் கல்லாமையின் இழிவை, செல்வர் முன்ன்ே வறியவன் நிற்பது காணக் கூடிய காட்சியே. ஆனால் கற்றவர் முன்னே கல்லாதவன் நிற்பது காணச் சகியாத காட்சியாகும் என்று எதிர்மறையாக எடுத்துக் காட்டிக் கல்வியின் இன்றியமை யாமையை உணர்த்தியுள்ளமை அண்ணலின் திறமைக்குச் சானறு. மாணாக்கரிடம் இவர் அதிகமாக வற்புறுத்துவது ஒழுக்கத்தை. 'விழுப்பம் தரும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகப் போற்றப்படும்" என்பதை, ஒழுக்கத்தின் எய்துவர் கேண்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி (137)