பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அதுபவ நாயகர் * 153 2. பொதுத் தொண்டு'; அண்ணல் ஒரு சமயம் பெங்களூர் சென்றிருந்தபொழுது, 95 அகவையைத் தாண்டிய நாடறிந்த பொறியியல் நிபுணர் சர் விசுவேகர ஐயா அவர்களைக் காண ஆசைப்பட்டு ஒரு கன்னட நண்பரின் துணை கொண்டு சென்றார். அவரிடம், அண்ணலைப் 'பொதுத் தொண்டு செய்பவர்' என்று கன்னட நண்பர் அறிமுகப்படுத்தினார். பழுத்த பழமாகச் சாய்வு நாற்காலியில் படுத்திருந்த அந்தப் பெருமகனார், 'பொதுத் தொண்டா? பொதுத் தொண்டா?’ என்று இருமுறை சொல்லி "அது மிகவும் கடினமாயிற்றே? இவரால் அதனை எப்படிச் செய்ய முடிகின்றது?’ என்று வியப்புடன் வினவினார். அப்போது அப்பெருமகனாரின் கருத்து அண்ணலுக்கு விளங்கவில்லை. சர் வி.ஐயா அவர்கள் உடனே விளக்கத் தொடங்கினார்-இரண்டு நிகழ்ச்சிகள் மூலம். (1) நான் அரசாங்க அலுவலாக மேட்டுருக்குச் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் ஐந்து மைல் தூரத்தில் நண்பர் வீட்டுத் திருமணம். அதற்கும் செல்ல வேண்டியிருந்தது. வண்டியோட்டி அந்தப் பாதையில் வண்டியைத் திருப்பினார். எனக்கு உடலெல்லாம் நடுங்கி விட்டது. ஏனெனில் நான் சென்றது அரசாங்க வண்டியில். அதை எப்படி நான் என் சொந்த அலுவலுக்குப் பயன் படுத்தலாம்?" ஆகவே வண்டியோட்டியைக் கோபித்து வண்டியைத் திருப்பி 20 மைல் தொலைவு உள்ள என் இருப்பிடத்திற்கு வந்து, பின்பு என் சொந்த் வண்டியை எடுத்துக் கொண்டு திருமணத்திற்கு சென்று வந்தேன். அதுதான் என் மனத்திற்கு நிம்மதியைத் தந்தது. . (2) 'நான் அலுவல் பார்க்கும் காலத்தில் என் மேசையின் மீது இரண்டு பேனாக்கள் இருக்கும். அரசாங்க அலுவலுக்குத் தனிப்பேனாவும் என் சொந்த அலுவலுக்கும் உறவினர் 14. அதிவுக் கதைகன் - பக் 33 .િ11.